கபடத்தனமாக ஆட்சியை கைப்பற்றுவதற்கு நினைக்கிறார்கள் - ஜனாதிபதி மைத்திரி
தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் பத்திரிகையாளர்களை அழைத்து வைத்துக் கொண்டு புலிகள் மீண்டும் உருவாகப் போகிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் வந்துவிட்டது. என்றெல்லாம் தீவிரவாதிகள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப் புலிகளை நாங்கள் மீள உருவாக்கப் போகிறோம். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்து விட்டோம். என தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு பேசிவரும் தீவிரவாதிகளே வடக்கில் தேசிய பாதுகாப்பினால் இடம்பெயர்ந்து 25 வருடங்கள் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை வந்து ஒரு தடவை பாருங்கள்.
நான் அந்த மக்களை சந்தித்தேன் அந்த மக்களுடைய வாழ்க்கை முறையை பார்த்தேன். அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவல வாழ்க்கையை பார்த்தேன். அதனை பார்க்காமல் தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் பத்திரிகையாளர்களை அழைத்து வைத்துக் கொண்டு புலிகள் மீண்டும் உருவாகப் போகிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் வந்துவிட்டது.
என்றெல்லாம் தீவிரவாதிகள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணம்- மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற தேசிய நத்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
இன்று மாலை 5மணிக்கு நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தென்னிலங்கையில் சிலர் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்து விட்டார்கள். புலிகளை மீள உருவாக்கப் போகிறார்கள். என பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தீவிரவாதிகளே.
இந்த நாட்டில் கடந்த 26 வருடங்கள் யுத்தம் நடைபெற்றது. யுத்தம் 2009ம் ஆண்டு நிறைவடைந்த போதும் யுத்தம் உருவானதற்கான காரணம் இனங்காணப்படவில்லை. அதற்கான காரணத்தை நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் இன்றைய தினம் நான் வலி,வட க்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்தேன். அவர்களுடைய வீடுகளுக்குள் சென்றேன்.
அவர்கள் வாழ்ந்த இடங்களை பார்த்தேன் சமைப்பதை பார்த்தேன், சட்டி, பானைகளை பார்த்தேன். அவர்கள் என்னிடம் கேட்டார்கள் எங்களை எங்கள் சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுங்கள் என தேசிய பாதுகாப்பு இந்த மக்களுடைய தலைகளில் சுமத்தப்பட்டிருக்கின்றது.
இதனை தென்னிலங்கையில் இருந்து கொண்டிருக்கும் சில தீவிரவாதிகள் நிச்சயமாக பார்க்க வேண்டும். அவர்கள் ஒரு முறை வடக்குக்கு வரவேண்டும்.
அவர்களுக்கு பெற்றோல் செலவு வேண்டுமானால், கப்பல் வேண்டுமானால், விமானம் வேண்டுமானால் நான் கொடுக்கிறேன்.
அதனை கொண்டு இங்கு முகாம்களில் இருந்து கொண்டிருக்கும் மக்களை ஒருதடவை அவர்கள் வந்து பார்க்கவேண்டும்.
இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு இடமில்லை. தேசிய பாதுகாப்பு சீராகவே இருக்கின்றது.
இந்நிலையில் இது இப்படி, அது அப்படி என்பவர்கள் கபடத்தனமாக ஆட்சியை கைப்பற்றுவதற்கு நினைக்கிறார்கள். அது ஒருபோதும் சாத்தியமில்லை.
மக்கள் ஒத்துழைப்பு அல்லது மக்கள் ஆணை வழங்கப்படாமல் கபடத்தனமாக ஆட்சியை கைப்பற்றுவதற்கு இங்கே இடமில்லை. என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Real Leader
ReplyDeleteDear excellency president,
ReplyDeleteplease implement all promises that you have given in the election time. .
because it is the bad mark for this government.
When you execute them, then you will be the Real Hero