Header Ads



இலங்கையின் இரண்டு போர்க்கப்பல்கள், இந்தியா பயணம்


சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளன.

சிறிலங்கா கடற்படையின் பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பலான, எஸ்எல்என்எஸ் சமுத்ர, அதிவேக ஏவுகணைக் கப்பலான எஸ்எல்என்எஸ் நந்திமித்ர ஆகிய இரண்டு போர்க்கப்பல்களுமே, கொச்சி துறைமுகம் சென்றுள்ளன.

இந்தப் போர்க்கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான, கப்டன் டி.எஸ்.டயஸ், கப்டன் எம்.எஸ்.செனிவிரத்ன, மற்றும் புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரசன்ன ஹெவகே ஆகியோர், நேற்று இந்தியக் கடற்படையின் தென்பிராந்திய தலைமை அதிகாரி றியர் அட்மிரல் ஆர்.பி.பண்டிட்டை சந்தித்து  பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா போர்க்கப்பல்கள் கொச்சி துறைமுகத்தில் தங்கியிருக்கும் போது, இருநாட்டு கடற்படையினரும் இணைந்து பல்வேறு, துறைசார் செயற்பாடுகளில் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், இந்தியக் கடற்படையின் தென்பிராந்திய தலைமையகத்தின் பயிற்சி வசதிகளையும், சிறிலங்கா கடற்படையினர் பார்வையிடவுள்ளனர்.

சிறிலங்காவின் போர்க்கப்பல்கள் இரண்டும், நாளை வரை கொச்சி துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.