விக்னேஸ்வரன் தொடர்பில் அமெரிக்காவும், இந்தியாவும் அதிருப்தி..?
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் அமெரிக்காவும், இந்தியாவும் அதிருப்தியில் இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகர், சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன், கடந்த நொவம்பர் மாதம் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வாலும், இது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கின்றமையை, அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஏற்றுக் கொண்டிருந்தார்.
எனினும் இது பேச்சுவார்த்தை அடிப்படையிலேயே தீர்த்துக் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதேநேரம் தம் மீது, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு, வடக்கு முதல்வர் சீ.விக்னேஸ்வரன் நீண்ட விளக்க கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment