சந்திரிக்காவுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சி..?
அவன்ட்கார்ட் ஆயுதக்கப்பல் விடயம் தொடர்பில் தமது சாதகப் போக்கை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்பார்த்தார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனையவர்களையும் அவன்ட்கார்ட் விடயத்துக்கு சாதகமாக கொண்டு வரமுயற்சித்தார்.
எனினும் தாம் அதனை நிராகரித்துவிட்டதாக சந்திரிக்கா கூறினார்.
துறைமுக கப்பல்துறையின் ஓய்வுப்பெற்ற உறுப்பினர்களுக்கான நிகழ்வு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் அழைப்பின்பேரில் சந்திரிக்கா பங்கேற்றார்.
அவன்ட்கார்ட் விடயம் தொடர்பில் சாதகமாக பேசுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பல அமைச்சர்களுடன் பேசி இணக்கம் பெறமுயற்சித்தார்.
உதவிபொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு 100 மில்லியன் ரூபாய்களையும் கோத்தபாய தருவதாக உறுதியளித்துள்ளார்.
எனினும் குறித்த பொலிஸ் அதிகாரி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அரசாங்க தகவல்களின்படி அவன்ட்கார்ட் நிறுவனத்திடம் இருந்து பல பில்லியன் ரூபாய்கள் வருமானமாக கிடைத்தன.
எனினும் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸும் இணைந்து சட்டவிரோதமாக நிறுவனம் ஒன்றை அமைத்தனர்.
இதேவேளை மத்திய வங்கியில் இருந்து 7 பில்லியன் ரூபாய்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர் ஒருவரின் சகோதரருக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோடையில் கொள்கலன் தாங்கி அமைப்புக்களுக்கே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் மஹிந்த ராஜபக்ச அந்த திட்டத்தை மாற்றி அங்கு துறைமுகத்தை அமைத்தார்.
இலங்கை போன்ற சிறிய நாட்டில் கொழும்பை போன்று பிரதான துறைமுகம் ஒன்று இருக்க ஹம்பாந்தோட்டையில் அவ்வாறான அவசியம் இருக்கவில்லை என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டார்.
Post a Comment