"பொதுபல சேனாவுக்கு கிடைத்த வெற்றி"
-இஸ்மாயில் பீ. மாஆரிப்-
இலங்கையின் புத்திஜீவிகளாலும் துறைசார்ந்த வல்லுனர்களாலும் மிதவாத அரசியல்வாதிகளாலும் பிரஸ்தாபிக்கப்பட்டதும் வரவேற்கப்பட்டதும் எதிர்பார்க்கப்பட்டதுமான உத்தேச வெறுப்புணர்வு சட்டமூலத்துக்கு என்ன நடந்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது.
பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்துக்கு ஏறியது வெறுப்புப் பேச்சுகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் தண்டனைக் கோவைக்குள் புகுந்தும் ஏற்பாடுகளில் காணப்படக்கூடிய சட்டச்சங்கடங்களை எடுத்துக்கூறி அறிக்கையிட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டமாக்கப்படுவதனால் ஏற்படக்கூடியதான அபாயங்களைக் கூறி அதனைக் கடுமையாக எதிர்த்தது.
வாபஸ் பெறவேண்டுமென அரசையும் கோரியது. பொதுபலசேனா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று முறையிட்டது. சட்டமூலத்தை எதிர்த்து வழக்குகளும் பதிவாகின. ஈற்றில் சட்டமூலத்தை அரசு கைவிட்டுவிட்டதாக இராஜாங்கத்தார் அறிவித்ததன் மேல் தடந்தெரியாமல் போய்விட்ட செய்தியை அறிந்து கொண்டிருக்கிறோம்.
அடிப்படையும் தேரரின் அக்கறையும்
வெறுப்புணர்வை குற்றமாக்கும் சட்டமூலம் என்பது கடந்த அரசாங்க காலத்தில் முக்கிய சிரேஷ்ட அமைச்சர்கள் பலரால் வரவேற்கப்பட்டு அதனை வரைவது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேசப்பட்ட தலைப்பாகும். தற்போதைய அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும் அதுபற்றி பல தடவைகளில் பேசியவரே. ஆனால் திடீரென ஏற்பட்ட திருப்பம் பலருக்கு கடுமையான ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் இனவாதம், மதவாதம் இரண்டறக் கலந்து போய்விட்டமை உலகமறிந்ததே. ஆனால் அது அரசியலளவுக்கு இருப்பதற்குமப்பால், சதாகாலமும் மதரீதியான இழிநிலைப் பேச்சுக்கள் திட்டவட்டமான முறையில் சமூகங்களுக்குள் ஊடுருவல் செய்து நிரந்தரமான வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளமை தெரிந்ததே.
இலங்கையின் அரசியலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனவாதம் ஏற்படுத்தியிருக்காத தாக்கத்தை பொதுபலசேனாவின் தோற்றமும் அதன் மதவாதப் போக்குகளுமே வெறுப்புணர்வையும் வெறுப்பான பேச்சுகளையும் ஒரு தண்டனைக்குரிய குற்றச் செயலாக மாற்ற வேண்டும் என்ற யோசனையை வலுப்படுத்தியது. இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு பொதுபலசேனாவின் மீது வெறுப்புணர்வு இருந்து கொண்டிருக்கிறது.
ஆனால் வெறுப்புணர்வு தண்டனைக்குரிய சட்டமாக்கப்பட வேண்டும் என்ற தீவிர மனப்பான்மை பெரும்பான்மை இன அரசியல்வாதிகளிடமிருந்தே கிளிம்பியமை தொடர்பில் சீர்தூக்கிப்பார்க்கப்பட வேண்டும். இந்த நிலைமையில் வெறுப்புணர்வைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்ட ஏற்பாடுகளை தண்டனைக் கோவைக்குள் புகுத்துவதை மறுதலித்து ஞானசாரதேரர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடுகிறார்.
அந்த வகையில் இஸ்லாத்தோடும், இஸ்லாமியக் கோட்பாடுகளுடனும் மதவாத ரீதியாக போரிடும் நிரந்தர விருப்பம் கொண்டுள்ளார் என்பது புலனாயிற்று. எவர் மனது புண்பட்டாலும் இஸ்லாமிய நெறிமுறைகளை விமர்சித்துக் கொண்டம் பண்ணிவிடுகின்ற உரிமை எந்த வகையிலும் பறிபட்டுப்போய்விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகவுள்ளார்.
சீண்டுவது தீண்டுவதற்காகவா?
வேத நூல்களை வைத்துக் கொண்டு வாதம் புரிகின்ற வாய்ப்பு சம்பந்தப்பட்ட வேத நூல்களுக்குரியவர்களிடையேயானதாக இருப்பதே சிறந்தது. அத்தகைய நூல்களை பிற மதத்தவர்கள் அறிவுக்காக, விளக்கம் பெற்றுக் கொள்வதற்காக நுணுக்கமாக ஆராய்ந்தாலும் அதுபற்றி முரண்பட்ட கருத்துகளை பரப்புரை செய்து மதரீதியான பண்பியல் கொலை புரிய முற்படக்கூடாது. அண்மையில், அல் குர்ஆனை தடை செய்யவேண்டும் என தேரரான ஞானசார தேரர் பகிரங்கமாக தெரிவித்தார்.
காலத்துக்குக் காலம் அவ்வப்போது நாங்களும் இருக்கிறோம் என்பதைக் காண்பிப்பதற்காக பத்திரிகையாளர்களையும் இலத்திரனியலாளர்களையும் சந்திக்கும் அவர், முஸ்லிம் சமூகத்தையும் சீண்டுவது தீண்டுவதற்காகவா? அல் குர்ஆனைப் பற்றியும் அதன் பெறுமதியைப் பற்றியும் அவர் அறிந்திருக்க முடியாது.
அல் குர்ஆனை தொடுவதில், ஓதுவதில், அதனைக் கையாள்வதில் கூட அடிப்படை நெறிமுறைகளை முஸ்லிம்களுக்குக் கூட விதித்திருக்கும் நிலையில் அதனை கையில் ஏந்திக் கொண்டு அதனை தடை செய்யவேண்டும் எனக்கூறும் தேரரின் யோக்கியதைதான் என்ன? சிங்கள மக்களை பிழையாக வழிநடத்துகிறார். ஒரு இனத்தின் மனஉணர்வுகளை தெருவுக்கு இழுக்கிறார்.
எழு காரணிகளும் இராஜாங்கக் குறைபாடும்
ஒழுங்குப்பத்திரத்தில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்தை முன்கொண்டுசெல்வதில்லை என அரசு எடுத்த தீர்மானத்துக்கு எழு காரணிகளாயமைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை, பல்வேறு தரப்புகளால் சட்டமூலத்தில் வலிதாந்தன்மையை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அக்கறை மிக்கவர்களால் முன்வைக்கப்பட்ட பிரகூலங்கள் போன்றன சட்ட ஏற்பாடுகளை கவனமாக பரிசீலனைக்குட்படுத்தாத மன்றாடியார் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம், விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் பலவீனமான அணுகுமுறைகளையும் அம்சங்களையும் பின்புலப்படுத்துகின்றன.
ஏனெனில் குறித்த வெறுப்புப் பேச்சுகளை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றுகின்ற அரசியல் சதுரங்கப் பேச்சு, வெறுப்புப் பேச்சுக்கு களம் அமைத்துக் கொடுத்தோர் காலத்திலிருந்தே களைகட்டியது. சுமார் இரண்டு வருடங்கள் பழைமைவாய்ந்த எண்ணக்கருவுக்கு உரமூட்டப்பட்ட தன்மையை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்துக்கு ஏறிய உத்தேச தண்டனைக் கோவைக்கான சட்டத்திருத்தம் அல்லது உட்புகுத்துகை, பிரதிபலிக்காமை வருந்தத் தக்கதாகும்.
வெறுப்புணர்வை அல்லது வெறுப்புப் பேச்சினை தண்டனைக்குரிய குற்றமாக்கும் உத்தேச ஏற்பாடுகள் வசனங்களையும் வார்த்தைகளையும் நன்கு பரிசீலிக்காமல் ஒன்றிலிருந்து இன்னுமொன்றுக்கு வசனத் தொகுதியை இடமாற்றம் செய்துவிட்ட பிரமையைத் தோற்றுவிக்கிறது. கலந்தாலோசனை கருத்து பரிமாற்றம் இழையோடவில்லை. ஒரு சட்ட ஏற்பாடு எழுந்தமானத்தில் பிற ஏற்பாடுகளுடன் ஒத்திணங்காததாக இருக்க முடியுமாயினும் ஏகப்பட்டதுடன் முரண்படுவதாக தோன்றுவதாயின் அதன் முன்கூட்டிய ஆழமான தொடுகை நடைபெறவில்லை என்பதே பொருளாகும்.
உண்மையில் அரசியலமைப்பின் அநேக ஏற்பாடுகளை மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மிக நெருக்கமாக சாராத வகையில் அமைந்திருக்கக்கூடியதாக வசனங்கள் தென்படவில்லை என்பது வாதமாகும். குறித்த சட்டமூலத்துக்கான தேவை ஒருவர் கூறக்கூடிய கருத்துகளை குற்றமாக்குவதற்கானதாகவோ, கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதற்கானதாகவோ அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளுவதற்கானதாகவோ எழவில்லை.
எவரதும் மத நம்பிக்கைகள் புண்படுமளவுக்கு இதயத்தை இடருக்குள்ளாக்கும் கருத்துகளை அடக்கி வாசிக்கப் பண்ணுவதற்கான ஒரு கருத்தொழுங்குச் சட்டத்துக்கான தேவையும் மீறினால் தண்டனையும் என்ற தேவையுமே நாட்டில் தோன்றியது. அதிலும் குறிப்பாக அதற்கான அவசியத்தை தோற்றுவித்துக் கொடுத்தவரும் ஞானசார தேரரே.

Post a Comment