Header Ads



சிங்கள பேரினவாதிகளினால் குதறப்படும் றிசாத், அரசியலில் அநாதையாகுவாரா..?

-ஏ எம் எம் முஸம்மில்-

         ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப் பட்ட ஒரு முஸ்லிம் பிரதிநிதியை கீழ்த்தரமான அடைமொழிகளால்  சித்தரிக்கும் இனவாதிகளின் உச்சகட்ட எதிர்ப்பை கடந்த தினம் கொழும்பு விகார மகா தேவி பூங்காவின் அருகில் நடத்திய எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் போது தெரிவித்தார்கள், எந்த விதமன அடிப்படை ஆதாரங்களுமின்றி இரண்டு பிரதான குற்றச் சாட்டுகளை ஒரு சிறும்பான்மை சமூகப்  பிரதிநிதியின் மீது சுமத்தி,  இந் நாட்டின் கௌரவமாதொரு சமூகத்தை இலக்கு வைத்து வம்புக்கு அழைத்தார்கள். 

அதில் முதலாவது குற்றச் சாட்டு, அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் அரசியல் பலத்தின் பின்னணியில்  வடக்கு முஸ்லிம்கள்  வில்பத்து காட்டினை அத்துமீறி அழித்தொழிக்கின்றார்கள் என்றும், மற்றையது அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தம் அடியாட்களை வைத்து  தூள்வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் கூக்குரல் இட்டார்கள். கொபெல்ஸ் நியதிப் படி ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் இவர்கள் இம்முறை இன்னொரு பொய்யையும் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். அதாவது அமைச்சரின் தூள் வியாபாரம் பற்றிய புரளி. 
     ஒரு சமூகப் போராட்டம் என்பது தமது உரிமைகள், மற்றும் தனித்துவத்திற்காக முன்னெடுக்கப்படும் ஜனாயக ரீதியிலான போராட்டங்களாகும். அதேவேளை எதிர்ப்பு ஆர்ர்பாட்டங்கள் ,ஊர்வலங்கள் போன்றனவும்  இதுபோன்று உரிமைகளிக்காகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவும் மேற்கொள்ளப் படும் போராட்ட யுக்திகளாகும். ஆனால் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்திருப்பது, பாரிய குற்றச் சாட்டுகளாகும். இந் நாட்டு சட்டதிட்டங்களுக்கமைய உடனடியாக கைது செய்து உரிய  தண்டனைகளை வழங்கக் கூடிய குற்றச்சாட்டுகளாகும். அவ்வாறான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சமூகங்களுக்கு மத்தியில் ஒரு பட்ட நிலைமையை தோற்றுவிக்கும் நோக்கில் இது போன்ற ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் நோக்கம் இந் நாட்டில் இன்னுமொருமுறை இரத்த ஆற்றை ஒட்டுவதட்காக செயற்படுத்தப் படும் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே எண்ணவேண்டியுள்ளது.

      குறிப்பிட்ட இந்த ஆர்பாட்டம் பற்றி கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்ட சிங்கள இனவாத ஊடகங்களும் ஆர்பாட்ட காரர்களின் சுலோகங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலேயே தமது செய்தித் தலையங்கங்களை வகுத்திருந்தன. குறிப்பாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் தம்மீது சுமத்தப் பட்ட அபாண்டங்களுக்கு எதிராகவே தமது முறைபாட்டை   போலீசில் பதிவு செய்திருந்தார். தாம் ஒரு தூள் வியாபாரி என்றும், வில்பத்து காட்டை அழிப்பதாகவும் வீண்பழி சுமத்திய ஆனந்த சாகர தேரோவிடம் நூறு கோடிரூபா நஷ்ட ஈடு கோரியே குறிப்பிட்ட முறைபாட்டை பதிவு செய்திருந்தார். ஆனால் “மவ்பிம” எனும் சிங்கள நாளிதழ் “ தமக்கு மரவேடன் ” என்று சொன்னதற்காக அமைச்சர் ரிஷாத் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார் “ தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. மவ்பிம பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது போல் ஆர்பாட்டத்தில் பங்குபற்றிய பல இளைஞர் யுவதிகள் அவ்வாறான பதாகைகளை தாராளமாக கையில் ஏந்தி வந்ததை காணமுடிந்தது. 

     அதேபோல் இணையதளங்களில் புதிதாக அதிவேகமாக பரப்பப் படும் “சின்ஹ லே” (சிங்கத்தின் ரத்தம்) எனும் முகநூளின் முன் பக்க பதிவாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விற்கு 7௦ வது பிறந்த  நாள் வாழ்த்து தெரிவித்துள்ள பதிவின் அடுத்த பதிவாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் சம்பந்தமாக ஒரு பதிவு இடப் பட்டுள்ளது. அதில் “ லாஇலாஹா இல்லல்லாஹு” என்ற கலிமா வாசகத்தை சுட்டிக் காட்டி அதுதான் எதிர் காலத்தில்  ரிஷாத் பதுர் தீனின் ஜாசிம் சிட்டிக்கு வைக்கவுள்ள பெயர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்திட்குள் வைத்து உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களை கருத்து தெரிவிக்க விடாமல் மறித்து அவர்மீது தாக்குதல் செலுத்தியதும் , ஞான சார தேரர் குர் ஆனை தடை செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக கருத்து கூறியதும் , தெஹிவளையில் ஆயுதங்களுடன் ஐ எஸ் தீவிர வாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இருவர் கைது செயப்பட்டார்கள் என்ற பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்பப் பட்டு வருவதுமாக  அண்மைக்காலமாக நடைபெற்று வரும் சம்பவங்களுக்கு மத்தியில் தொடர்புகள் இருப்பதாகவே எண்ணவேண்டியுள்ளது.
   
        ஆகவே எமது சமூகத் தலைமைகள் இவ்விடயங்கள் ரிஷாத் பதியுத்தீனின் தனிப்பட்ட அரசியல் பிரச்சினைகள் என்ற மனப்பாங்கில் உதாசீனமாக விட்டு விடாமல் கருதொருமித்த செயற்பாடுகள் மூலம் எம் சமூக விடியலுக்காக செயற்பட முன்வரவேண்டும்.       .                 

9 comments:

  1. Rishad Badiuddeen is obviously a brave lion who is credited to have come forward in the forefront confronted Raja pakhse clane face to face , rest of our so called leaders trailing behind .
    He is above all an ascending star in political firmement Masha Allah.
    In a short while he has accompolished much exceptionally well.

    ReplyDelete
  2. Our slmc leader now busy with Enrique iglisies and Christmas parties. .so don't disturb him.our mawanella and akurana cabinet ministers are busy visiting pansalas.

    ReplyDelete
  3. He challenged many times to prove this. Why can't this govt investigates and tell the nation whether he is right or wrong. Ranil and my3 again prove that they are incapable and inefficient to rule the country.

    ReplyDelete
  4. Dear brother Rishard,
    May Allah guide you with wisdom!

    ReplyDelete
  5. The 'Yaha Palanaya' is scared of BBS and the rest of the similar
    Groups! In this matter both the MR & MS+R regime did and doing the same.

    ReplyDelete
  6. Namma muslim ministers chairs and posting oddikondu iruppaverhal eppadi pesuvarhal

    ReplyDelete
  7. Mawanella la yaaru Muslim minister.appidi otthar illaye

    ReplyDelete
  8. ரிசாத் பதுர்தீன் அவர்களின் மீதுள்ள குற்றச்சாட்டு தனிப்பட்ட அவர் மீதுள்ள குற்ற சாட்ட அல்லது இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மீதுள்ள குற்ற சாட்டா என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் இது சம்பந்தமாக ஏனைய அரசியல் வாதிகளின் மௌனத்தை குறை கூர முடியும். பல கோடி ரூபாக்கள் செய்து கிடைக்க வேண்டிய பிரபல்யமும் ( முஸ்லிம் மக்கள் ) அரசியல் அதிகாரமும் ( பெரும்பான்மை கட்சிகளிடம்) ரிசாத் பதுர்தீன் அவர்களுக்கு மிகவும் இலகுவாக கிடைத்துள்ளது அதை அவர் சரியாகவும் பயன்படுத்திக் கொள்ளவும் முனைகிறார் என்றே நாம் கருதுகிறோம்.

    ReplyDelete
  9. May the Almighty protect him from all the evils ..

    ReplyDelete

Powered by Blogger.