Header Ads



"இயக்க வெறி"

-Readislam-

மக்களுக்குச் சேவை செய்வதாக, தொண்டு செய்வதாக நம்பிக் கொண்டு ஆளுக்கொரு இயக்கப் பெயரை வைத்துக் கொள்கிறார்கள். சிலர் அதை அரசில் பதிவு செய்து கொள்கிறார்கள். சிலர் பதிவு செய்யாமலும் செயல்படுகிறார்கள். உண்மையில் மக்களுக்கு ஏதாவதொரு உலகியல் பலனளிக்கும் செயல்களைச் செய்யவும் செய்கிறார்கள். அதனால் உலகில் பேர் புகழ் கிடைக்கவும் செய்யலாம். ஆனால் இதுவும் ஒரு மாயைதான் என்பதை அறியாமல் ஏமாறுகிறார்கள்.

ஷைத்தானின் மாய வலையில் வசமாகச் சிக்கிய அச்சகோதரர்கள் அவர்களின் கற்பனையில் உதிக்கும் ஓர் இயக்கப் பெயரைத் தேர்ந்தெடுத்து சூட்டிக் கொள்கிறார்கள். முன் சென்றவர்கள் உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு பொய்க் கடவுள்களுக்குச் சுயமாகப் பெயர் சூட்டி, பிரபல்யப்படுத்தி ஆதாயம் அடைந்தது போல், இவர்கள் கற்பனையில் உதித்தப் பெயர்களைத் தங்களின் இயக்கங்களுக்குப் பெயராகச் சூட்டி அவற்றைப் பிரபல்யப்படுத்தி உலகியல் ஆதாயங்களை அடைகிறார்கள்.

ஆனால் இயக்க வெறியில் அதாவது மாயையில் சிக்கிப் பாராட்டையும், புகழையும் எதிர்நோக்கிச் சேவை செய்யும் இழிநிலைக்கு இன்றைய இளைஞர்கள், இளம் பெண்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். புகழையும், கண்ணியத்தையும் விரும்பும் இவர்கள் படிப்பினைப் பெற்றுத் திருந்தினார்கள் என்றால் தப்பினார்கள். இல்லை என்றால் மீளா நரகமும், கடும் தண்டனைகளும் காத்திருக்கின்றன என்பதை நினைவில் கொள்வார்களாக.

மேலும் இந்த இயக்க வெறியர்களிடம் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்பட்ட ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல், இன்ன பிற தவறான செயல்களை உரிய குர்ஆன் வசனங்கள், ஹதீஃத்களைக் காட்டி உணர்த்தினால் முஃமின்களைப் போல் உடனடியாக அதற்குக் கட்டுப்படும் உயர் பண்பு இல்லை. அதற்கு மாறாக அற்பமான இவ்வுலகில் கிடைக்கும் மிகமிக அற்பமான லாபங்களைக் காட்டி இறைக் கட்டளைகளை நிராகரித்துப் பாவிகள் ஆகிறார்கள். ஆயினும் இயக்க வெறியர்கள் உணர்வதாக இல்லை.

அதற்கு மாறாக ஏதாவதொரு பெயரைக் கற்பனை செய்து அதற்கு பைலா தயார் பண்ணி அரசில் பதிவு செய்து கொள்கிறார்கள். தலைவர், செயலர், பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள், உறுப்பினர்கள் என ஒவ்வொருவருக்கும் அட்டையைக் தொங்க விடுகிறார்கள். அதைக் கொண்டு பெருமையும் படுகிறார்கள். இவை போதாதென்று ஆண்கள் அணி, பெண்கள் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, குண்டர் அணி எனக் கணக்கற்ற அணிகளைக் கற்பனை செய்து அவற்றிற்கும் தலைவர், செயலர், உறுப்பினர்கள் என நியமித்து இயற்கையாக மனித பலகீனத்தின் காரணமாக இருக்கும் பதவி ஆசையை வளர்த்து விடுகின்றனர். இதில் தப்பிப் பிழைப்பவர்கள் மிக மிகச் சிலரே!

இயக்கத்தினர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் டிஜிட்டல் பேனர், சுவரொட்டி, துண்டுப் பிரசுரம் என தலைமை, முன்னிலை, பேச்சாளர்கள், நன்றி நவிலல் என அரசியல் கட்சிகள் தோற்றது போங்கள் என அமர்க்கலப்படும். அரசியல் கட்சியினருக்காவது மக்களிடையே அறிமுகமாக, பேர், புகழ் பெறும் கட்டாயம் இருக்கிறது. தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறும் கட்டாயத்தில் அப்படிச் செயல்படுகிறார்கள்.

பெரும்பாலான அரசியல் கட்சியினர் நாத்திகர்கள் அல்லது இறைவன், மறுமை பற்றி உறுதியான நம்பிக்கை இல்லாதவர்கள். இவ்வுலகே மாயம், வாழ்வே மாயம் என்பதல்ல அவர்களின் கொள்கை. இவ்வுலகே சதம்; வாழ்வே சதம் என்ற கொள்கையுடையோர். அதனால் பேர், புகழுக்காக, பட்டம், பதவிகளுக்காக, காசு பணத்திற்காக ஆலாய்ப் பறப்பதில் அர்த்தமுண்டு.

பணத்திற்கும், பதவிக்கும் ஆலாய்ப் பறக்கிற அரசியல்வாதிகள், இயக்கவாதிகள் பெருத்துவிட்ட காலம் இது. முஸ்லிம் அல்லாதவர்களின் நிலை இப்படி இருக்கலாம். அவர்கள் இவ்வுலகை மட்டும் நம்பி இருப்பவர்கள். அதற்கு மாறாகத் தங்களை முஸ்லிம்களும் பேர் புகழில் ஆசைப்பட்டு, பட்டம் பதவிகளுக்காக ஆலாய்ப் பறந்தால் அதன் பொருள் என்ன? இவர்களும் அல்லாஹ்வின் மீதும், மறுமையின் மீதும் உறுதியான நம்பிக்கை இல்லாதவர்கள், 49:14 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் இறை நம்பிக்கை (ஈமான்) நுழையாத பெயர் தாங்கி முஸ்லிம்கள் என்பதுதானே அதன் பொருள்.

அல்லாஹ்மீதும், மறுமையிலும் உறுதியான நம்பிக்கை இருந்தால், உலகியல் பேர் புகழைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள். நாளை மறுமையில் விசாரணை ஆரம்பித்தவுடன் இவ்வுலகில் பெரும் பேர் புகழுடன் பிரசித்தி பெற்ற ஷஹீத்கள், ஆலிம்கள், வள்ளல்கள் விசாரிக்கப்பட்டு முகம் குப்புற இழுபட்டு நரகில் எறியப்படுவார்கள். காரணம் அவர்கள் இவ்வுலகில் பேர் புகழுக்காகச் செயல்பட்டவர்கள்.

சாதாரணச் சேவை செய்தவர்களா இவர்கள்? மகத்தானப் பெரும் பெரும் சேவை செய்தவர்கள். சத்திய மார்க்கத்தை நிலை நாட்ட, அதை எதிர்த்தவர்களுடன் கடுமையாகப் போரிட்டு இறுதியில் ஷஹீதானவரின் சேவை சாதாரண சேவையா? தான் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை இல்லாதவர்களுக்கு வாரி வாரி வழங்கிய வள்ளல். இந்த மூன்று சேவையாளர்களுக்கு முன்னால் இன்றைய இயக்கவாதிகள் செய்யும் சேவைகள் கால்தூசு பெறுமா?

சிந்தியுங்கள்.

அப்படிப்பட்ட பெரும் பெரும் சேவையாளர்களே முகம் குப்புற இழுபட்டு நரகில் எறியப்படுகிறார்களே! என்ன காரணம்? ஆம்! அவர்கள் செய்தது பெரும் பெரும் சேவைகளாக இருந்தும் மக்களிடம் பேர் புகழை எதிர்பார்த்து செய்ததுதான் அவர்கள் செய்த ஹிமாலயக் குற்றம். இப்போது சிந்தியுங்கள்.

இயக்கவாதிகளே, அவற்றின் உறுப்பினர்களே, உலகியல் பேர் புகழை மட்டுமே நாடிச் செயல்பட்டவர்களே முகம் குப்புற இழுபட்டு நரகில் எறியப்படுவார்கள் என்றால், பேர் புகழுடன், பட்டம் பதவி, காசு பணம், செல்வாக்கு இவற்றை எதிர்பார்த்துத் தனித்தனி இயக்கங்களில் செயல்படும் உங்களின் நாளைய நிலை என்ன? சிந்தித்தீர்களா? பாழும் நரகம் என்றால் சொகுசு மெத்தை என எண்ணிக் கொண்டீர்களா?

அந்தோ பரிதாபம்! இதற்குக் காரணம் 47:24 இறைவாக்குக் கூறுவது போல் உங்களின் உள்ளங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு உங்கள் இயக்கத் தலைவர்களின் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்பட்ட வழிகெட்ட போதனைகளை வேதவாக்காகக் கொண்டு நீங்கள் செயல்படுவதுதான். நீங்கள் குர்ஆனை நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்க வேண்டும் என்று இறை வாக்குகள் கூறிக் கொண்டிருந்தும், அத்தனை இறைவாக்குகளையும் நிராகரித்து குஃப்ரிலாகி நீங்கள் நம்பியுள்ள இயக்கத் தலைவர்கள் பின்னால் கண்மூடிச் செல்வதால்தான் இந்த பரிதாப நிலை.

இந்த இயக்கவாதிகளின் அன்றாடச் செயல்பாடுகளைப் பாருங்கள். நேரடி குர்ஆன், ஹதீஃத் போதனைகளை நிராகரித்து தலைவர்களின் வழிகெட்டப் போதனைகளைக் கண்மூடிச் செயல்படுத்துவார்கள்.

கடமையான தொழுகைகளைப் பாழ்படுத்துவார்கள். எதிர் தரப்பினரை எதிரிகளாகச் சொல்லி அவர்கள் மீது அவதூறுகளை அள்ளித் தெளிப்பார்கள். அதுமட்டுமா? சண்டை சச்சரவு, அடிதடி போன்ற ஒரு முஃமினிடம் இருக்கக் கூடாத அனைத்து அக்கிரமச் செயல்களும் இயக்க வெறியர்களிடம் காணப்படுகிறது. இந்த இயக்க வெறியர்கள் ஒன்றைத் திட்டமாக அறிந்து கொள்வார்களாக. அவர்கள் நம்பியுள்ள இயக்கத் தலைவர்கள் ஒருபோதும் அவர்களுக்கு நேர்வழி காட்ட முடியாது.

அல்குர்ஆன் 7:146 இறைவாக்குக் கூறுவது போல் வீண் பெருமையால் அவர்கள் அல்லாஹ்வாலேயே நேர்வழியில் இருந்து திருப்பப்பட்டு, நேர் வழியை வெறுப்பவர்களாகவும், கோணல் வழிகளை நேர்வழியாக எடுத்து நடப்பவர்களாகவும் இருக்கும் நிலையில் அவர்களால் உங்ளுக்கு நேர்வழியைக் காட்ட முடியுமா? ஒருபோதும் காட்ட முடியாது. குருடன் பாதையைக் காட்ட முடியுமா?

எனவே இயக்க வழிகேட்டை விட்டு விடுபட்டு நேரடியாக 3:103 இறைக் கட்டளைப்படி எந்த நிலையிலும் பிரியாமல், பிளவுபடாமல், ஒரே ஜமாஅத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் நேரடி போதனைகள்படி நடக்க முன்வாருங்கள். அதுவே இவ்வுலகில் பெரும் வெற்றியைத் தருவதோடு, நாளை மறுமையிலும் சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். அல்லாஹ் அருள் புரிவானாக!

8 comments:

  1. If Dhajjaal appears tomorrow with his paradise, all these "Seyalaalar, Porulaalar" and their people will be his followers.

    ReplyDelete
  2. கட்டுரையாளரே உங்கள் பிரச்சினை என்ன?
    சொல்ல வந்த விடையத்தை தெளிவாக சொல்ல வேன்டியது தானே. ஏன் இந்த பிதட்டல்.

    ஒரு அமைப்பை தாக்க நினைத்து நேரத்தை வீனடித்துவிட்டீரே.

    ReplyDelete
    Replies
    1. பைத்தியத்துக்கு வைத்தியம் கிடையாது.

      Delete
  3. முதலில் ஆக்கங்களை வெளியிடும் போது நாம் எழுதுவது எனன் என்பதை வாசித்து அனுப்புங்கள் இது கட்டுரையாளர்களுக்கும் இணையத்தள நிறுவாகத்தினருக்கும் பொருந்தும்

    ReplyDelete
  4. இயக்கங்கள் சமுகத்துக்கு தேவை இல்லை என்பது முட்டாள் தனமானது. இயக்கங்களுக்கு வெளியில் இருப்பவர்களை விட, ஏதாவது ஒரு இயக்கத்துடன் சேர்ந்திருப்பவர் மார்க்கத்துடன் ஓரளவுக்கேனும் நெருங்கியவராக இருக்கிறார். இயக்கங்களுக்கு அப்பாற் பட்டவர்களில் அதிகமானோர் சைத்தானின் வலையில் மிக எளிதாக வீழ்ந்து விடுகிறார்.
    ஆனால் இயக்க வெறி இப்லீசுக்கு சமமானது.
    இயக்க வெறியை ஒழித்து, இயக்கங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வை வளர்க்க வேண்டும். இதற்க்கு ஒவ்வொருவரும் மனமிரங்கி முன்வர வேண்டும்.

    ReplyDelete
  5. This "writer..??" vasted our time....he doesnt know how to write and himself he doesn't know what he want to say....
    He is another PUPPET of the All Ceylon Jamiyathul Ulama...? or Asath Saali..?
    Helo, you want to say Iran...ISIS...ACJU...Mushriks....Kufriyyeen....Murtatheen...Shia....Taliban.....all other terrorists group in the name of mulim...are same....?
    They all are saying Allah's name but going to fake ways...so all are same..?
    Pls try to learn more and more before you tell to the public something..man

    ReplyDelete
  6. Good article, its not about one group, its applicable for most of them.

    ReplyDelete
  7. நான் பல வருடங்களுக்கு முன்னர் ஜமாத்தே இஸ்லாமிய இயக்கத்தை ஆதரித்திருந்தாலும் அதன் மந்தமான செயற்பாடுகளால், சமூகத்திற்கு போதிய நன்மைகள் கிடைக்காத நிலையில் ஒதுங்கிக்கொண்டு தற்போது எந்த இயக்கங்களையும் சாராத, அதே நேரம் எல்லா இயக்கங்களுமே (மனிதர்கள் என்ற அடிப்படையில்) பிழை செய்யக்கூடியவர்கள், சிறுசிறு பிழைகள் செய்யத்தான் செய்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுத்துக்கொண்ட நிலையில்... தற்போதுள்ள இயக்கங்கள், அமைப்புகளை பொருத்தவரை, பி.ஜே யை தலைமைத்துவமாக கொண்ட தௌஹீத் இயக்கமென்றாலும், கோவை அய்யூப்பை தலைமைத்துவமாக கொண்ட தௌஹீத் இயக்கமென்றாலும், உண்மையில் இந்த தௌஹீத் பெயரிலான இயக்கமே துணிவாக இணைவைத்தலில் இருந்தும், மூடக்கொள்கைகளில் இருந்தும், ஷிஆக்களின் சூழ்ச்சிகளில் இருந்தும் உண்மையான இஸ்லாத்தை வேறுபடுத்திக்காட்டி அநேக முஸ்லிம்களை (இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில்) வழிகேட்டில் இருந்து (அள்ளாஹ்வின் நாட்டத்தோடு) காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்பதுவே நிதர்சனம்.

    அவ்வாறே இலங்கையில்..., உண்மைகளை அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் அப்பாவி மக்களுக்கு கூறாமல், தங்கள் செல்வாக்கையும், இலாபங்களையும் பாதுகாத்துக்கொள்வதற்காக மறைத்து வைத்திருந்த மார்க்கத் "தலைமை"களின் போலி முகங்களையும் தோலுரித்துக்காட்டி உண்மைகளை புட்டு வைத்தவர்கள் இந்த இயக்கத்தை சார்ந்தவர்களே. அதனாலேயே, தங்கள் பிழையான வழிகாட்டுதல்கள் மக்களால் நிராகரிப்படுவதாலும், தாங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாவதாலும் இந்த இயக்கத்தை அழிக்கவேண்டும் என்ற குறிக்கோளில் மேற்சொன்ன கூட்டங்கள் பலவிதமான விமர்சனங்களை இவர்களுக்கெதிராக முன்வைத்து, இவர்களை ஒரு தீவிரவாதிகளாக, மாற்று மதத்தினருக்கும் எதிரானவர்களாக சித்தரித்து காட்டிக்கொடுத்து நயவஞ்சகத்தனம் செய்கிறார்கள். இது உண்மையான இஸ்லாத்தின் அடிப்படையில் மிகப்பாரதூரமான ஒரு "முனாபிக்" (நயவஞ்சகத்) தனமானதாகும்.

    இதை ஒவ்வொரு முஸ்லிமும் சரியாக புரிந்துகொண்ட நடக்கவேண்டும் என்பதே எனது பொதுவான வேண்டுகோளாகும்.

    ReplyDelete

Powered by Blogger.