முஹம்மது நபியின் போதனைக்கு தொடர்பில்லாத, அடிப்படைவாத குழுக்களுக்கு சவுதி அரேபியா உதவி
பிரித்தானியாவுக்கு முதன்மை அச்சுறுத்தல் நாடு எது என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு லண்டனின் முன்னாள் மேயர் கென் லிவிங்ஸ்டன் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.
ரஷ்யாவில் ஊடகத்துறையினர் ஒருங்கிணைத்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய Ken Livingstone, பிரித்தானியா மற்றும் மேற்கத்திய நாடுகளின் முதன்மை அச்சுறுத்தலாக ரஷ்யாவை கருத முடியாது என்றார்.
ரஷ்யாவிடம் இருந்து இதுவரை மேற்கத்திய நாடுகள் எவ்விதமான அச்சுறுத்தலையும் எதிர்கொண்டதில்லை என தெரிவித்துள்ள லிவிங்ஸ்டன், பிரித்தானியா தற்போது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளில் பெரும்பாலான குழுக்களுக்கு நிதி உதவி அளித்து வருவது பிரித்தானியாவின் நெருங்கிய நட்பு நாடுகளில் முதன்மையான சவுதி அரேபியா என தெரிவித்துள்ள அவர்,
இறைதூதர் நபி அவர்களின் போதனைகளுக்கு சற்றும் தொடர்பில்லாத, சகிப்புத்தன்மையற்ற இதுபோன்ற குழுக்களை ஆதரிப்பதை சவுதி நாடு கடமையாகவே செய்து வருவதாக குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் அவர், ரஷ்யா நாடு மிக மோசமான ஊடகத்துறையினரின் வளையத்தில் சிக்கியுள்ளதாகவும், நாட்டின் அதிபரையே அரக்க குணம் கொண்டவர் என சித்தரித்து உலக அரங்கிற்கு தவறான கண்ணோட்டத்தை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு நிதியுதவி அளித்துவரும் சவுதி மற்றும் கத்தார் நாடுகளுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகள் கண்டிப்புடன் தெரிவிக்க வேண்டிய காலம் நெருங்கியுள்ளதாக தெரிவித்துள்ள லிவிங்ஸ்டன்,
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்துங்கள் அல்லது முதன்மை நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து ஒதுக்கப்படுவீர்கள் என்பதை அழுத்தமாகவும் துணிவுடனும் இந்த இரண்டு நாடுகளும் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதன் தேவை குறித்து தற்போது உணர்ந்துள்ள அமெரிக்கா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து போராட துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ள லிவிங்ஸ்டன்,
பயங்கரவாதத்திற்கு எதிராக போராட பாரிய கூட்டணி தேவை எனவும், அமெரிக்கா நிதியுதவியால் பலம் பெற்ற ஆப்கான் முஜாகிதீன்கள்தான் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
Poolsit .I thing are u sia ?
ReplyDeleteஎமது உயிரினும் மேலான முகமது நபி சள்ளல்லாஹு அலைஹிவசள்ளம் அவர்கள் போதித்த, பின்பற்றிய, கட்டளை இட்ட இஸ்லாம், சஹாபாக்கள் பின்பற்றிய இஸ்லாம் எது என்று தெரியாத மனிதனின் பேச்சை நாம் மதிக்க தேவையில்லை. ஒரு காபிரான மனிதனுக்கு பயந்து அல்லாஹ்வின் சட்டத்தை, அல்லாஹ்வின் தூதர் செய்த விடயத்தை இஸ்லாம் இல்லை என்று யாரும் சொல்லவும் கூடாது, அதற்கு ஆதரவு அளிக்கவும் கூடாது. நேர்வழி காட்டுவது அல்லாஹ், நேர்வழி காட்ட வேண்டும் என்று அந்த தொழிலை யாரும் தங்களது தொழிலாக எடுத்துக் கொண்டு, அதற்காக அல்லாஹ்வின் மார்க்கத்தின் விடயங்களை மறக்கவும், மறுக்கவும் தேவையில்லை. அது மிகவுமே கேவலமான செயலாக இருக்கிறது. காபிருக்கு பயந்து ஒரு முஸ்லிமை, முஸ்லிம் இல்லை என்று சொல்லக் கூடாது. அல்லாஹ் நபியைக் கூட இப்படியான் செயலை செய்ய அனுமதிக்கவில்லை, அதனால் அவன் வஹியை இறக்கி "அவர் கடுகடுத்தார்" என்று வசனத்தை அருளினான். அல்லாஹ் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பொருந்திக் கொள்வானாக.
ReplyDelete