ஹக்கீமும் ரிஷாத்தும் சமந்ததா பவரை சந்தித்து, தனி முஸ்லிம் அலகு கேட்டனர்
கிழக்கில் முஸ்லிம் தனி அலகு அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவே 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அழுத்தம் கொடுக்குமாறு முஸ்லிம் கட்சிகள் சமந்தா பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளன என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்;
முஸ்லிம் அரசியல் கட்சிகளான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீனின் கட்சிகளுடன் சமந்தா பவர் கலந்துரையாடியுள்ளார். இதன்போது இவர்கள் இருவரும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு தலையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இந்த அடிப்படைவாத, இனவாத முஸ்லிம் கட்சிகள் இதற்கு முன்பு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கவில்லை.
இம்முறைதான் பகிரங்கமாக சர்வதேச அமைப்பொன்றிடம் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் முஸ்லிம் தனி அலகொன்றை பெற்றுக் கொள்வதற்கு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது.
அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் போன்று முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் முஸ்லிம் தனி அலகை கிழக்கு மாகாணத்தில் அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் ஒப்பந்தம் செய்திருக்கலாம்.
அதன் காரணமாகவே தற்போது அவர்கள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆகையால் அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
One of the mahinda era loser. Peanut size brain holder.
ReplyDeleteWhere is your President wimal weerawangsa? You can ask him to take a lemon puff and do the campaign against USA embassy.
ReplyDeleteAppo Samantha power udaytha srilanka ninga paniyaram thinum surayo thaanda
ReplyDelete