Header Ads



வசிம் தாஜூடீன் கொலை சந்தேக நபர், வெளிநாடு செல்லத் தடை..!

ரகர் வீரர் வசிம் தாஜூடீன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இராணுவப் புலானய்வு அதிகாரி கப்டன் திஸ்ஸ என்பவர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவினர், இது குறித்த தடையுத்தரவினை அண்மையில் நீதிமன்றின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

தாஜூடீனின் வாகனம் தீப் பற்றி எரிந்த போது அந்த இடத்திற்கு சென்றிருந்த சிலர் கெப்டன் திஸ்ஸவை போன்ற நபரொருவர் அங்கிருந்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் கொலை தொடர்பில் விசாரணை நடத்த கப்டன் திஸ்ஸ வரைவில் கைது செய்யப்பட உள்ளார்.

இந்த கப்டன் திஸ்ஸ என்பவர் தற்போது வடக்கு இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்டன் திஸ்ஸ கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தராகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவரது பாரியார் சிராந்தி ஆகியோரின் சாரதியாகவும் கடயைமாற்றியுள்ளார்.

No comments

Powered by Blogger.