Header Ads



"மனநோயால் பாதிக்கப்பட்டவர் + அட்டூழியக் கும்பலொன்றின் தலைவர்"

 முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக வர முயற்சிக்கும் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து, பல தரப்பிலிருந்தும் கண்டனங்களை ஈர்த்துள்ளது.

அமெரிக்கா மீதான ஒரு வெறுப்புணர்வை பல முஸ்லிம்கள் பேணுவதாகவும், இந்த அச்சுறுத்தலுக்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறியும்வரை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த கருத்துக்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கும் விழுமியங்களுக்கும் முரணானது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இவரது போட்டியாளரான குடியரசு கட்சியின் ஜெஃப் புஷ், இவரை மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்று வர்ணித்துள்ளார்.

மத அடிப்படியில் ஒருவரை அமெரிக்காவுக்குள் நுழைவதிலிருந்து தடுப்பது, ஏற்றுக்கொள்ளமுடியாத மனதை புண்படுத்தக்கூடிய ஒரு திட்டம் என்று யூத ஆதரவு அவதூறு எதிர்ப்பு கழகம் தெரிவித்துள்ளது.

அட்டூழியக் கும்பலொன்றின் தலைவர் போல டோனல்ட் டிரம்ப் பேசுகிறார் என்று அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான மன்றம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.