Header Ads



பிரான்ஸிற்கு சோதனை

பிரான்ஸில் நடைபெற்ற தொடர் தாக்குதலை அடுத்து அங்கு முதற்தடவையாக பிராந்திய தேர்தல் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர்  13 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலை அடுத்து  அரசாங்கத்தின் ஆதரவு கிடைப்பது ஒரு சோதனையாக அமையும் என தேர்தல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்  முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்கோசியின் வலது தேசிய முன்னணி பெரும்பான்மை வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வலது தேசிய முன்னணி ஆதரவாளர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதோடு பெரும்பாலன பிராந்தியங்களை கைப்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்டுள்ள கருத்துக்கணிப்பின் பிரகாரம்  மற்றும் தேசிய முன்னணி 30 வீத வாக்குளையும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி 22 வீத வாக்குகளையும்  பெற்றுக்கொள்ளும் என்பதோடு பெரும்பாலாள பகுதிகளில் சோசலிஸ்ட் கட்சி தமது  கட்டுப்பாட்டை இழக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு 44 மில்லியன் பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்தக கருத்துக்கணிப்பில் காணப்படுகின்ற வலிமையான செயற்திறன் 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என தேசிய முன்னணி எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன்.

No comments

Powered by Blogger.