Header Ads



அரசின் முயற்சிகள் தோல்வி, டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, பொருளாதார நெருக்கடி...?

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி இலங்கைப் பொருளாதாரத்தில் பாரிய சரிவை ஏற்படுத்தும் அதேவேளை  வர்த்தக நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படும் என    ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரொய்ட்டர் செய்திச்சேவை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையொன்றையில் தற்போதைய நிலையில் மிதக்கவிடப்பட்டுள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி ஒரு டொலருக்கு 144 ரூபா என்ற வகையில் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் இதன் வீழ்ச்சி ஒரு டொலருக்கு சுமார் 180 ரூபா என்ற அளவு வரை வீழ்ச்சியடையலாம் எனவும் எதிர்வு கூறியுள்ளது. 

இதன் காரணமாக இலங்கையின் வெளிநாட்டு சொத்து இருப்பிலும் வீழ்ச்சியொன்றை எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ள ரொய்ட்டர் செய்திச்சேவை,  இறக்குமதி அதிகரிப்பதுடன், இறக்குமதிக்கான செலவுகளும் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது.

இந்த நிலையில் பொருளாதாரத்தை நிலையாக தக்கவைத்துக் கொள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதன் காரணமாகவே தற்போதைய தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனவே எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் இலங்கையில் ஒரு பொருளாதார நெருக்கடியினையும், வாழ்க்கைச் செலவு உயர்வினையும்  தவிர்க்க முடியாது போகும் என்றும் ரொய்ட்டர் செய்திச் சேவையின் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.