Header Ads



வாசிம் தாஜூடீனின் படுகொலை, கப்டன் விமலசேன கைது செய்யப்பட்டார்

வாசிம் தாஜூடீனின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கப்டன் விமலசேன என்பவரை கைதுசெய்துள்ளதாக இராணுவ தளபதி கிறிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவத்தால் மேற்கொள்ளப்படட் உள்ளக விசாரணைகளின்போது விமலசேனா குறித்து தெரியவந்துள்ளது,யாழ்ப்பாணத்தில் உள்ள முகாம் ஒன்றில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கப்டன் திசா குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன, அவரிற்கு நிச்சயமாக வேறு பெயர் ஏதாவது இருக்கவேண்டும். நாங்கள் கப்டன் திசா என்பவர் குறித்து உள்ளக விசாரணையை மேற்கொண்டுள்ளோம். இதன்போது கப்டன் விமலசேன என்பவரை இனம்கண்டுள்ளோம். நாங்கள் இராணுவ விதிமுறைகளை பின்பற்றி அவரிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கின்றோம்,என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவபேச்சாளரும் இந்த விடயத்தை உறுதிசெய்துள்ளார்.அவர் மிகமுக்கிய அரசியல்வாதியின் வாகனச்சாரதியாக செயற்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளோம்,ஆனால் நீங்கள் குறிப்பிடும் திசாவும் அவரும் ஓரே நபரா என்பது தெரியவில்லை என இராணுவபேச்சாளர் தெரிவித்துள்ளார்.இராணுவம் குற்றப்புலானய்வு பிரிவிற்கு முழுமையான ஓத்துழைப்பை வழங்குகின்றது,இராணுவம் ஊடகங்களிற்கும் எதனையும் மறைக்கவில்லை,இராணுவத்தில் கப்டன் திசா என்று எவரும் இருக்கவில்லை விமலசேனா என்பவரே இருக்கின்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. என்ன ஒரு பித்தலாட்டம் !

    ReplyDelete
  2. வசீமை வைத்தே வாழ் நால் முழுதும் அரசியல் செய்வார்கலோ!

    ReplyDelete

Powered by Blogger.