Header Ads



இளம் கண்டு பிடிப்பாளர் 'நஜீப் முகம்மட் டிலாஸ்' வரலாற்றுச் சாதனை

(எம்.ஏ.றமீஸ்)

இளம் கண்டு பிடிப்பாளர்களை நாட்டில் உருவாக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் அகில இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட புதிய கண்டுபிடிப்பாளர் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவன் நஜீப் முகம்மட் டிலாஸ் என்பவர் புதிய நுணுக்குக் காட்டியினை கண்டு பிடித்து பாடசாலைக்கு வரலாற்றுச் சாதனை ஏற்படுத்தியுள்ளார் என அதிபர் ஏ.எல்.அன்வர் தெரிவித்தார்.

இலங்கை விஞ்ஞான முன்னேற்ற அமைப்பின் 71ஆவது ஆண்டு நிறைவையொட்டி இளம் கண்டு பிடிப்பாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதன்போது இப்பாடசாலை மாணவர் நஜீப் முகம்மட் டிலாஸ் முதலாமிடம் பெற்றமைக்காக தங்கப்பதக்கத்தினையும் பெறுமதி மிக்க பரிசில்களையும் பெற்றுக் கொண்டார்.

அன்றாட வாழ்வின்போது மக்கள் பயன்படுத்தி கழிவுப் பொருட்களாகக் குவிக்கும் பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்நுணுக்குக்காட்டி தற்போது பாவனையில் உள்ள நவீன நுணுக்குக்காட்டிகளை விடவும் சுமார் நான்காயிரம் மடங்கு உருப்பெருக்கும் வல்லமை  கொண்டது.

ஒளி நுணுக்குக் காட்டி மூலம் பார்க்கமுடியாத சில விடயங்களையும் இதன் மூலம் பார்க்க முடியும். இதனை இருள் சூழ்ந்த பகுதிகளிலும் பயன்படுத்த முடியும். மிகக் குறைந்த எடையினையுடைய கைக்கடக்கமான இந்நுணுக்குக்காட்டியினால் ஒரே தடவையில் பலர் இணைந்து தாவர, விலங்கு, நுண்ணங்கிக் கலங்களை மிகத் தெளிவாக காணமுடியும். பாடசாலை மாணவர்கள் இதன்மூலம் மிகுந்த பயன்பாட்டினைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாய் இது அமைக்கப்பட்டுள்ளதனால் மிகக் குறைந்த விலையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இம்மாணவர் ஈடுபட்டுள்ளதாக அதிபர் ஏ.எல்.அன்வர் மேலும் தெரிவித்தார்.


3 comments:

  1. Alhamdulillah, Wish all the best for young scientist Najeeb Mohamed Dilash

    ReplyDelete
  2. May Allah bless him with both religous knowledge (Islam) and worldly knowledge ( Scinece)

    ReplyDelete

Powered by Blogger.