இலங்கைக்கு காலநிலை எச்சரிக்கை
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் நிலைமை இலங்கையிலும் உருவாகலாம் என்று பீ.பீ.சி. செய்திச்சேவை எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டின் வானியலாளர்களை மேற்கோள் காட்டி இந்த எச்சரிக்கைச் செய்தியை பீ.பீ.சி. செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.
இந்த அபாய எச்சரிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது பொலன்னறுவை மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அநுராதபுரத்திலும் நாச்சியாதீவு, கலா-பளளுவெ வ போன்ற குளங்கள் நிரம்பி வழிந்து, வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.
வடக்கில் கிளிநொச்சி, கிழக்கில் திருமலை , மட்டக்களப்பு மாவட்டங்களும் இவ்வாறான வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளன.
அத்துடன் வருடம் முழுவதும் கடுமையான வரட்சியினால் பாதிக்கப்படும் ஹம்பாந்தோட்டை மாவட்டமும் இம்முறை வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
தங்காலை- ஹம்பாந்தோட்டைக்கு இடைப்பட்ட பல இடங்களில் வெள்ளம் காரணமாக பாதைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் வரையான போக்குவரத்தும் வெள்ளம் காரணமாக துண்டிக்கப்படும் நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment