றிசாத் பதியுத்தீன் மோசடியாக பறித்தார் எனக்கூறும், அலி ஸாஹிர் மௌலானாவிற்கு அமீர் அலி பதில்
மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமையை எமது கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் மோசடியாக பறித்து எனக்கு தந்துவிட்டதாக மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவின் ஊடகச் செய்திகளைப் படித்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
மட்டு. மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைமைக்கு தனது பெயர் முன்மொழியப்பட்டதாகவும் அதனை மோசடியாக பறித்துக் கொண்டதாகவும் அந்தச் செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தார்.
முதலில் மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைமைப் பதவி கடந்த காலங்களில் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்ற வரலாறு தெரியாமல் இவ்வாறான ஒரு கருத்தை அவர் கூறியிருப்பது ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியின் அரசியல் முதிர்ச்சியற்ற சிறுபிள்ளைத்தனமான கூற்றாகவே கருத முடியும். பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவின் பெயர் மட்டு. மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைமைப் பதவிக்கு யாரால் முன்மொழியப்பட்டது? ஐக்கிய தேசியக் கட்சியாலா? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸாலா? அல்லது ஐ.ம.சு. முன்னணியாலா? அல்லது வேறு ஏதாவது கட்சியினாலா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
மாவட்டக் குழுத் தலைவர் பதவி என்பது அரசில் பதவி வகிக்காதவர்களுக்குத்தான் வழங்கப்படவேண்டும் என்பது சிறுபிள்ளைத்தனமான கூற்றாகும். இன்று எமது நாட்டில் பல அமைச்சர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவிற்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் பதவி வழி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைமையாக மூன்று மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்துபவர்.
போதாக்குறைக்கு அதே கட்சியைச் சேர்ந்த இன்னொருவரையும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமிக்கவேண்டி ஆசைப்படுவது ஒரு நியாயமான அரசியல் போக்காகக் கருதமுடியாது.
மாறாக இது பதவி ஆசைக்கான செயற்பாடாகவே கொள்ளமுடியும். கடந்த காலங்களில் இந்த நல்லாட்சியை உருவாக்குவதில் எமது கட்சி சிறுபான்மையினரின் நலன் கருதி தீவிரமாகக் களமிறங்கிச் செயற்பட்டது.
அந்த வகையில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியை எமக்குத் தரவேண்டும் என்ற ஒப்பந்தத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிமிடம் ஐக்கிய தேசியக் கட்சிக்காரராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராகவும் நடிப்பது எனக்குத் தெரியாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் என்ற வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவராகின்ற உரிமை எனக்கு இல்லை என்றா நீங்கள் கருதுகின்றீர்கள்? உங்களது இந்த ஊடக அறிக்கையானது உங்களது பதவி மோகத்தின் வெளிப்பாடாகவே கருத முடிகின்றது.
They are fighting for chair. . but bbs is speaking against holy quran they will not speak against bbs.bbs . shameless ministers
ReplyDelete