Header Ads



ஹிருணிகாவை கைதுசெய்வது தொடர்பில் ஆலோசனை, வீடியோக்களை கையளிக்கவும் உத்தரவு

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெமட்டகொடை ஆள்கடத்தல் தொடர்பில் நடத்திய செய்தியாளர் மாநாடு குறித்த வீடியோக்களை கையளிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று பல தொலைக்காட்சி நிலையங்களிற்கு உத்தரவிட்டு;ள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் செய்தியாளர் மாநாடு தொடர்பிலான வீடியோ பதிவுகளை கோரியுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததை தொடர்ந்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவினர் ஹிருணிகாவை கைதுசெய்வது தொடர்பில் சமீபத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலொசனையை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் சட்டம் அதன் கடமையை செய்யும் என நம்புகிறோம். ஹிருனிக்கா இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி சட்டத்துக்கு தலை வணங்கி முன் மாதிரியாக இருப்பார் என நம்புகிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.