Header Ads



சோமாலியாவில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளுக்குத் தடை

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சோமாலியாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாணடு நிகழ்ச்சிகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

 இதுகுறித்து சோமாலியாவின் மத விவகாரப் பிரிவு பொது இயக்குநர் ஷேக் முகமது காய்ரோ கூறியதாவது:

 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர்பாக நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் இஸ்லாம் மதத்துக்கு எதிரானது. எனவே அத்தகைய நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

 அதுபோன்ற நிகழ்ச்சிகள் எங்காவது நடைபெற்றால் உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படி பாதுகாப்புப் படையினருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களின் மத விரோதத் தன்மையால் அவை அல்-ஷெபாப் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகக் கூடும் என்றார் அவர்.

 தலைநகர் மொகாடிஷுவில் உள்ள விமான நிலையத்தில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது அல்-ஷெபாப் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். சோமாலியா, கிறிஸ்துமஸ் விழாக்களுக்குத் இந்த ஆண்டு தடை விதித்த இரண்டாவது முஸ்லிம் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு புருணே நாடு தடை விதித்தது.

3 comments:

  1. There are only about 1000 Christians in Somalia. So whats the big deal in here? They are portraying it as a big issue. If you ask a Somalian who lives in western countries 99% of them will say that they have never met a Christian before coming to Western Countries.

    ReplyDelete
  2. இவர்கள் தடை விதிப்பது போல் முஸ்லிம்கள் சிறு பன்மையாக வாழும் நாடுகளில் முளிம்களுக்கு உரிய பெருநாட்களை கொண்டாட தடை விதித்தல் எப்படி இருக்கும். இஸ்லாமிய வரலாற்றில் யாரும் இப்படி தடை விதித்ததை நாம் காணோம்.

    ReplyDelete
  3. Bro Aafee அந்த தடை கிறிஸ்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையல்ல. முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்டது.

    ReplyDelete

Powered by Blogger.