மஹிந்த ராஜபக்ஸவை கைதுசெய்து, தண்டனை வழங்குங்கள் - கலாநிதி விக்ரமபாகு வலியுறுத்து
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போய் 2000 நாட்கள் கடந்துள்ள நிலையில், விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவினால் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற பாரிய குற்றங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவே காரணம் என விக்ரமபாகு கருணாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால், மஹிந்த ராஜபக்ஸ கைது செய்யப்பட வேண்டியது அத்தியாவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவே தனது கணவரை கடத்தியதாக பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
Post a Comment