இவர்கள்தான் நிஜமான ஹீரோக்கள் (வீடியோ)
சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய இஸ்ரேலிய வீரர்கள். கொஞ்சம் கூட அசராது தங்களின் இறை வணக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கும் பாலஸ்தீன முஸ்லிம்கள். துப்பாக்கி வைத்திருக்கும் இஸ்ரேலியர்கள் மனதில் இனம் புரியாத ஒரு திகில் இருக்கிறது. நிராயுதபாணிகளாக நிற்கும் முஸ்லிம்கள் மனதில் எந்த பயமும் இல்லை.
உண்மையாளர்களுக்கு வீரர்களுக்கு ஒரு முறைதான் சாவு. கோழைகளுக்கு தினமும் சாவு. தினம் தினம் அவன் செத்து பிழைப்பான்.இஸ்லாமியன் என்ற காரணத்துக்காக வெட்டுப்பட்டோ குண்டடிப் பட்டோ இறந்தால் அந்த இளைஞனுக்கு நேரடியான சொர்க்கம். எனவே எந்த பயமுமின்றி யாருக்கும் தலை வணங்காமல் செல்கின்றனர் முஸ்லிம்கள். அரசும், ராணுவமும் காவல் துறையும் அமெரிக்காவும் கை வசம் இருப்பதால் இன்று வரை தாக்கு பிடிக்கிறது இஸ்ரேல். நிராயுதபாணிகளாக பாலஸ்தினர்களை சந்திக்கச் சொல்லுங்கள் பார்போம். ஒரே நாளில் இஸ்ரேல் காணாமல் போய் விடும்.
வீடியோ
ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒடுக்கப்படுகின்ற மக்களின் போராட்டமாக மட்டுமே பாலஸ்தீனியர்களின் போராட்டத்தையும் வீரத்தையும் பார்க்க வேண்டும். இனிவரும் தலைமுறையும் இவ்வாறு உயிரிழக்காமல் இவ்வுலகில் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக போராடும் அந்த மக்களின் தீரமிக்க போராட்டத்தை மறுவுலகில் கிடைக்கும் சுவர்க்கத்திற்காக என்று கொச்சைப்படுத்தும் அசிங்கத்தை இனியும் யாரும் புரியாதீர்கள்!
ReplyDeleteஅடுத்த உலகில் கிடைக்கும் பட்டுத்துணியை இவ்வுலகில் நிர்வாணமாய் வாழ்ந்து கொண்டு நெய்வதில் என்ன பலனிருக்கின்றது..?
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வேண்டுமானால் மறுமையில் கிடைக்க இருக்கும் சுவர்க்கம் கொச்சைப்ப்டுத்தப்படுவதாக அல்லது அசிங்கமாக இருக்கலாம் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் ஆனால் முஸ்லிம்களுக்கு அது சிறப்பானதே இங்கு முஸ்லிம்கள் இறைவனின் முன்னால் நிற்றும் போது அச்சமின்றி நிற்பதைக் சொல்லும் போது நாங்கள் சுவர்க்கத்திற்காக என்று கூறுவது உங்களுக்கு எப்படி இருந்தாலும் எங்களுக்குப் பரவாயில்லை
ReplyDeleteஜெஸ்லியோவின் இந்தக்கூற்று ஒன்றே போதும் இவர் "பசுத்தோல் போர்த்திய புலி" (இஸ்லாமிய பெண்ணின் உருவத்தோடு உலாவும் இஸ்லாமிய விரோதி) என்று! பெயரிலும் கூட தில்லுமுல்லு!
ReplyDelete"ஜெஸ்லியோ"விற்கும் நிலவனுக்கும் வித்தியாசம் நிலவன் தெளிவான பெயரோடு உலாவருகிறார், ஆனால் இந்த ஜெஸ்லி கேவலம் பெயர்கூட குழப்பம், ஆனால் பெண்வேடம்!
இந்தக்கூட்டங்கள் அந்த பாலஸ்தீன மக்களின் உரைகளை கேட்டால் தெரியும், அவர்கள் இறுதி இலக்கு என்னவென்று! முஸ்லிமான ஒவ்வொருவரதும் இறுதி இலக்கு அதுவாகவே இருக்கும், இருக்கவேண்டும்! இஸ்லாமியனுக்கு தனது உயிரைவிட "இஸ்லாம்" பெறுமதியானது!
ஓகே, உம்மிடம் ஒன்று கேட்கின்றேன்....
ஒரு மனிதனின் (இவ்வுலகத்தில்) பிறப்பதன், வாழ்வதன், இறப்பதன் நோக்கங்கள் என்ன? எவ்வாறு, ஏன் மனிதன் (தான் விரும்பாமலே) அழகு ஏற்றத்தாழ்வு, வசதி ஏற்றத்தாழ்வு, குண ஏற்றத்தாழ்வு, செல்வாக்கு ஏற்றத்தாழ்வு, அறிவு ஏற்றத்தாழ்வு, இட ஏற்றத்தாழ்வு,
உழைப்பு ஏற்றத்தாழ்வு, வெற்றி ஏற்றத்தாழ்வு, நிம்மதி ஏற்றத்தாழ்வு, என எல்லா வகையிலும் ஏற்றத்தாழ்வோடு பிறக்கின்றான், வாழ்கின்றான், மடிகின்றான்? எல்லா வசதிகளையும் தேவைக்கு மேல் கொண்டுள்ள மனிதன் கூட மரணிக்க முடியாமல் இருப்பதன் காரணம் என்ன? உம்மால் உமது மரணத்தை தடுக்க முடியுமா? அல்லது உமது மரணத்தை உமது விருப்பத்துக்கு ஏற்றவாராவது தள்ளிப்போட முடியுமா? அல்லது எப்போது என்றாவது சொல்ல முடியுமா? அல்லது உம்மிடம் எல்லா வசதிகளும் நிறைந்திருந்தாலும் உம்மால் என்றும் ஒரே மாதிரியாக இளமையாகத்தான் இருக்கமுடியுமா?
இவற்றிக்கு உம்மால் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, யதார்த்தமான, மெய்யான விடையை கொண்டுவாரும், சுவர்க்கம் உண்டா, இல்லையா என பின்னர் நாங்கள் கூறுகிறோம்.
இஸ்லாத்தில் மட்டுமல்ல, ஏனைய சமயங்களில் கூட (உதாரணமாக இந்து மதம், கிருஸ்தவ மதம்) சுவர்க்கம், நரகம் என்ற நம்பிக்கை உண்டு என்பதை படித்து, அல்லது கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.
(ஆனால் சுவர்க்கத்தை யார், எப்படி அடைந்துகொள்வார்கள், நரகத்தை யார், எப்படி அடைந்துகொள்வார்கள் என்ற சரியான புரிதல்தான் முஸ்லிமல்லாதோரிடம் இருக்கின்றது). சுவர்க்கம், நரகம் என்ற ஒன்று அவர்களிடம் இல்லையென்றால், அவ்வாறான தமிழ் சொற்களோ, ஆங்கிலச் சொற்களோ அகராதியில் இருந்திருக்காது. அரபியில் மாத்திரமே அச்சொற்கள் இருந்திருக்கும்.
Jesslya, நீங்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறீர்களா? அப்படி இல்லையாயின் தயவு செய்து இஸ்லாம் மதம் சார்ந்த நம்பிக்கைகளுடன் சம்பந்தமான விடயங்களில் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை கூறி இஸ்லாத்தின் நம்பிக்கைகளை கொச்சைபடுத்தும் விதமான கருத்துக்களை பதிவிடுவதை தவிர்ந்து கொள்ளுங்கள். அதுதான் மனித நாகரீகம்.
ReplyDeleteஅல்லது இஸ்லாத்தை ஏற்று அதன் வழி செல்பாவராயின் எல்லா முஸ்லிமும் அடிப்படை வாழ்வின் நோக்கம் மறுமையை நம்பி அங்கு கிடைக்கும் சொர்கத்தை அடைந்து கொள்வதே. அந்த சுவர்க்கம் கிடைக்க வேண்டுமானால் இவ்வுலகில் நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறை போட்டு எடுத்துக் கூறி உள்ளது.
மேலும் இந்த video வில் அந்த பலஸ்தீன போராளிகள் தங்களை சுற்றி ஆயுதம் தரித்த எதிரிகள் நின்று கொண்டிருக்கும் போது அவர்களை எதிர்த்து போராடவோ அல்லது தப்பிக்கவோ முயற்சி செய்யவில்லை அவர்கள் நம்பும் இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள். அந்த எல்லாம் வல்ல நாயன் இவர்களுக்கு வாக்குறிதி அளித்துள்ளான் இந்த போராட்டத்தில் நீங்கள் மரணிப்பீர்கலானால் இந்த உலகத்தையும் விட மேலான ( மேலான..மேலான..) சொர்கத்தை தருவதாக. நீங்கள் இந்த போராளிகளிடம் இந்த கேள்வியை கேட்டால் அவர்கள் நிட்சயமாக தாங்கள் இறைவனின் பாதையில் தான் போராடுகிறோம் எங்களது எதிர்கால சந்ததியை அந்த எல்லாம் வல்ல இறைவன் பார்த்துக்கொள்வான் என்பார்கள். ஆகவே தயவு செய்து இஸ்லாமிய நம்பிக்கையினை நீங்கள் கொச்சை படுத்தாதீர்கள்.
உங்களையும் என்னையும் படைத்த எல்லாம் வல்ல அந்த இறைவன் நமக்கு நேர் வழி காட்டுவானாக... அந்த பாலஸ்தீன மக்களுக்கு வெற்றியை அளிப்பானாக.. ஆமீன்
நண்பர்களே இஸலாமிய பெயர் இருந்தால் மாத்திரம் நாம் முஸ்லிமாக முடியாது!
ReplyDeleteஇவரின் இன்றைவரையுள்ள பின்னூட்டங்கள் அனைத்தும் " தமிழில்" தான் எழுதியுள்ளார். ஒரு ஆங்கில வார்த்தையையேனும் உபயோகப்படுத்தவில்லை.
எனக்குத்தெரிந்தவரைக்கும் நம் இலங்கை முஸ்லிம் பெண்கள் 100 % தூய தமிழில் எழுதுவது , கதைப்பது என்பது இல்லை என்று சொல்லுமளவுக்கு மிக மிக அரிது.
ஆகவே இவர் வெள்ளைத்தோல் போத்திய " குள்ள நரி"யாக, இருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன.
முஸ்லீம் பெண்களுக்கு தூய தமிழில் எழுதக்கூட முடியாது என்ற அற்புதமான ஓர் 'உண்மை'யை நண்பர் திரு. வொய்ஸ் கண்டுபிடித்து முஸ்லீம்களை அவமானப்படுத்தியிருக்கின்றார்.
ReplyDeleteநண்பர் குருவி, இஸ்லாம் என்ன உங்கள் பாட்டன் முப்பாட்டன் வீட்டுச் சொத்தா..? திருக் குர்-ஆன் இறக்கப்பட்டதே உலகமக்கள் அனைவருக்காகவும் என்று கூறப்படுகின்றது. அப்படியானால் இஸ்லாம் ஒன்றும் முஸ்லீம்களுக்கு மட்டுமானதல்ல; உலக மக்களுக்கானது. உண்மை இவ்வாறிருக்க நீங்கள் ஏதோ வம்சாவழிச் சொத்து மாதிரி சவடால் விடுகின்றீர்கள்...?
இஸ்லாமிய மதத்தின் மீது அனைவருக்கும் உரிமையுள்ளது. அதைப் பின்பற்றுவதற்கு மட்டுமல்ல; கபடமான நோக்கில் திரித்து போதிக்கப்படும்போது அதைத்தட்டிக்கேட்பதற்கும் போராடி மீட்பதற்கும் உரிமையுண்டு.
இதையெல்லாம் புரியாமல் உங்கள் ஞானசூன்யத்தைக் சகலருமறிய வாந்தியெடுத்துக் காட்ட வேண்டாம்.
''எழுத முடியாது '' என்பதற்கும் , '' எழுதுவது மிக மிக அரிது'' என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நான் சொல்லி விளங்கவேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்.
ReplyDeleteநுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். அதற்கு சான்றாக. எனது பின்னூட்டத்தை பார்த்துவிட்டு, கீழே உள்ள Link இல் ஆங்கிலத்தில் பின்னூட்டத்தை பதிந்து, எனக்கிறந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவது போல் இருக்கின்றது.
''எழுத முடியாது '' என்பதற்கும் , '' எழுதுவது மிக மிக அரிது'' என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நான் சொல்லி விளங்கவேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்.
நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். அதற்கு சான்றாக. எனது பின்னூட்டத்தை பார்த்துவிட்டு, கீழே உள்ள Link இல் ஆங்கிலத்தில் பின்னூட்டத்தை பதிந்து, எனக்கிறந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவது போல் இருக்கின்றது.
http://www.jaffnamuslim.com/2016/01/blog-post_33.html
அதுவும் அந்த பின்னூட்டத்தை, GMT 9.45PM ( SL TIME 3.15 AM ) க்கு பதிந்துள்ளீர்கள். இது தவறில்லை, ஆனால் நீங்கள் இலங்கையில் இருக்க சாத்தியமில்லை. அல்லது இலங்கையில் இருந்தால், ஒரு பெண் காலை 3.15AM க்கு Jaffna Muslim இல் பின்னூட்டும் எழுதவது அரிதிலும் அரிது.
This comment has been removed by the author.
ReplyDeleteJesslya, இஸ்லாமும் குர்-ஆன் உம் மனித குலத்துக்கே என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் உங்களது பதிவு இஸ்லாத்தின் அடிப்படையான நம்பிக்கையை கொச்சை படுத்துகிறது என்பது தான் எனது கருத்து. மாறாக எனது பதிவில் இஸ்லாம் எனது பாட்டன் முப்பாட்டன் வீட்டு சொத்து என்ற கருத்து பட ஒன்றும் இல்லை. மேலும் விமர்சனங்களையும் எதிர் கருத்துக்களையும் அறிவு என்ற தளத்தில் வைத்து அணுகுவதே அறிவு சார்ந்தவர்களின் பண்பாக இருக்கும் எனும் எனது கருத்துடன் உடன் படுவீர்கள் என நினைக்கிறேன்.
ReplyDeleteசின்னதொரு திருத்தம், நீங்கள் கரையோரத்தில் பிறந்து , பூங்காவுடன் கூடிய பலகளைகலகத்தில் பட்டம்பெற்று , உங்கள் முழு நேரத்தையும் இஸ்லாத்தை பற்றி ஆராயாமல், கண்ட கண்ட , தமிழ் திரைப்படங்களையும் , அதற்கு முக்கியத்துவம் கொடுக்கம் site களிலும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என நினைக்கிறேன்.
ReplyDeleteblog open செய்து , விவாதம் என்ற பெயரில் விதண்டாவாதம் பேசிக்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் இருந்து , சரியாக இஸ்லாத்தையும் இஸ்லாத்தில் '' நம்பிக்கை'' என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் தெரிந்துகொண்டாலே நீங்கள் மேற்குறிப்பிட்ட நிர்வானமாக வாழ்ந்து பட்டுத்துணி செய்யும் உதாரனத்தை கூறியிருக்க மாட்டீர்கள்.
உழவன் சேற்றில் கால் வைக்கும் போதே பயிர் விளைந்து விளைச்சல் தரும் என்ற நம்பிக்கையில் தான் அனைத்தையும் செய்கிறான்.. இஸ்லாத்தின் நம்பிக்கை இவ்வுலகம் விளைநிலம் என்பதும் அதற்கான கூலி மறுமையில் கிடைக்கும் என்பதுதான். உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லையென்றால் நீங்கள் முஸ்லிமாக முடியாது. அது தெரியுமா ?
ஆகவே தயவு செய்து இஸ்லாத்தை நன்றாக புரிந்து கொண்டு உங்கள் வாதத்தை பதியுங்கள்.
தயவு செய்து உங்கள் நேரத்தை கண்ட கண்ட website இல் படங்களைப பற்றியும் நடிகர்களைப் பற்றியும் ஆராய்ந்து விமர்சித்துக்கொண்டு வீணடிக்காமல், இஸ்லாத்தையும் கொஞ்சம் படியுங்கள். நீங்கள் ஒரு பட்டதாரி என்பதால் அதிகம் சொல்லவேண்டிய அவசியமிருக்காது என நினைக்கிறேன். இது ஒரு தயவான வேண்டுகோள் மாத்திரமே.