Header Ads



"இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கும் பொறுப்பை, அல்லாஹ் பார்த்துக்கொள்வான்"

அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தை பெற்றுத்தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவேன் என்று பகிரங்கமாக கூறிய ஒரு தலைவனை பெற்றுக் கொண்டவர்கள் நாம். அவர் மறைந்து இன்னும் 20 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்கிடையில் அவரது புகைப்படைத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அன்னாரின் வீரத்தை மறந்த சமூகமாக ஏன் மாறினோம்? என தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்எல்.றியாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேள்வியும் நாமே விடையும் நாமே என்று முஸ்லிம்கள் வாழக்கூடாது. இன்றுள்ள முஸ்லிம் இளைஞர்கள் இன்று நடைபெறவுள்ள அமைச்சர் றிசாட் அவர்களுக்கும் ஆனந்த தேரருக்குமிடையிலான விவாதத்தினை பல்வேறு கோணத்தில் பார்க்கின்றனர் என்பதை சில ஆக்கங்கள் மூலம் விளங்க முடிகின்றது.

இந்த நாட்டில் உள்ள சிறுபாண்மை மக்கள் விடயத்தில் பெரும்பாண்மை அரசுகளின் நிலைப்பாடு என்ன என்பதை தற்போது இந்த நாட்டின் தமிழ் மக்கள் விடயத்தில் நாம் காணமுடியும். முஸ்லிம் சமுகத்திலுள்ளவர்கள் அரசியல்வாதிகளையும் அவர்களது கருத்துக்களையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதைவிட பல மடங்கு பௌத்த மக்கள் பௌத்த தேரர்கள் ஒரு சமூகத்திற்கெதிராக முன்வைக்கும் கருத்தையும் எதுவித முன்யோசனையும் இன்றி ஏற்றுக்கௌவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரம் நமது மௌனம் சம்மதம். அதாவது அவர்களின் குற்றச்சாட்டுக்களை உண்மை என்ற நிலைப்பாட்டினை பெரும்பாண்மை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடக் கூடாதல்லவா? இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாககும் பொறுப்பை அல்லாஹ் பார்த்துக்கொள்வான். அதேநேரம் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு கோழைகளாக நாம் ஏன் இருக்க வேண்டும்? 

அக்கரைப்பற்றிலே உள்ள சுனாமி வீட்டுத்திட்டத்தில் கூட எம்மால் குடியேற முடியாதளவு தடைபோடும் பேரினவாதிகள் வடக்கிலே நம்மை விடுவார்களா? கேள்வியும் நாமே விடையும் நாமே என்று முஸ்லிம்கள் வாழக்கூடாது.

நமது அரசியல்வாதிகளின் மௌனம் அவர்கள் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் வலியை சரியாக உணரவில்லை என்பதை மட்டுமே தெளிவாக காண்பிக்கின்றது. நமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்திற்கு தனது ஒரு கோழிக்குஞ்சைத்தானும் இழக்காதவர்களால் இந்த வலியை சரியாக உணர முடியாது.
இந்த வெளியேற்றத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் அமைச்சர் றிசாட் இந்த விடயத்தில் அதிக கவனமெடுத்து வருகின்றார் என்பதை விளங்க முடிகின்றது. அவருக்கு அல்லாஹ் அருள்பாலிக்கட்டும்.   

முடிந்தால் ஆதரவு வழங்குவோம். இல்லையேல் இது வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை . அதை வடமாகாணத்தவரே கையாளட்டும் என்று பொறுமையுடன் அமைதிகாப்போம். 

3 comments:

  1. கட்டுரையாசிரியரின் கருத்து கடைசி பந்தி வரையிலும் சரி ஆனால் கடைசியில் சொன்னது தவரானது.
    முஸ்லிம்கள் என்றால் ஒரு குடும்பம். வடக்கு வேறு , கிழக்கு வேறு மலைநாடு வேறு என்றில்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் ஒரே மத்தையே பின்பற்றுகிறோம்.ஒரு உடலைப் போன்றவர்கள். அதில் எங்காவது வலி வந்தால் முழு உடலுமேதான் அதற்காக வருந்தும். இந்த விடயமும் அவ்வாறுதான். ஆகவே கருத்தை சொல்லுங்கள் , வேறுபடுத்திக்காட்டாதீர்கள்.

    ReplyDelete
  2. அன்பின் voice,
    நான் நினைக்கிறேன்... கட்டுரையாளர் கடைசி வரியில் அப்படி முடித்தது, நம்மில் பலர் அவ்வாறு இருப்பதும், அல்லது எதிராக செயற்படும் காரணத்தினாலும்.., "அவ்வாறு இருக்காதீர்கள்" என்று மறைமுகமாக சொன்னதாக இருக்கலாம்!

    ReplyDelete

Powered by Blogger.