Header Ads



"தமிழ்நாட்டிலிருந்து..." இலங்கை முஸ்லிம்கள் குறித்து, கடும் விமர்சனம்..!

(மிகமுக்கியமான குறிப்பு - முஸ்லிம்களினால் தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படும் ஒரு முஸ்லிம் சார்பு பேஸ்புக்கிலிருந்து பெறபட்டதே இது)

இலங்கை சகோதரர்களின் கவனத்திற்கு.....!!

இப்பதிவு எல்லா இலங்கை சகோதரர்களுக்கும் பொருந்தாது, சில அரைகுறை லூசுகளுக்கு மட்டுமே...)

நமது மீடியாவில் மழை வெள்ளம் சம்பந்தமாக வெளியிடக்கூடிய பதிவுகளுக்கு இலங்கையை சேர்ந்த சில இஸ்லாமிய சகோதரர்கள் ஏன் இப்படி விளம்பரம் தேடுகிறீர்கள், விளம்பரம் தேடுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்று எல்லா பதிவுகளிலும் பின்னூட்டம் இடுகிறார்கள்.

இலங்கையில் உள்ள அரசியல் சூழல் வேறு இந்தியாவிலுள்ள அரசியல் சூழல் வேறு....

சின்ன நாடான இலங்கையில் எண்ணற்ற முஸ்லிம் எம்பிக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டே இருப்பார்கள்.

மேலும் முஸ்லிம் சமுதாயமே பயங்கரவாத சமுதாயம் போன்ற தோற்றத்தை 100 ஆண்டுகளாக இந்துத்துவ இயக்கங்கள் செய்து வருகின்றன. இந்துத்துவ இயக்கங்களுக்கு பக்கபலமாக இந்திய ஊடகமும் செயல்பட்டு வருகின்றன.

இந்துத்துவ இயக்கங்களின் 100 ஆண்டுகால பொய் பிரச்சாரத்தையும், இந்திய ஊடகங்களின் பொய் பிரச்சாரத்தையும் இந்த மழை ஒரே வாரத்தில் வரலாற்றையே மாற்றி விட்டது.

உங்கள் நாட்டில் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி விசாவை ரத்து செய்த பி.ஜைனுல் ஆபிதீன் உருவாக்கியுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் ஒரு மாதத்திற்கு தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் நடத்தினர்.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை, இஸ்லாம் அன்பை போதிக்கும் மார்க்கம் என்று ஒரு மாத காலம் மாநிலம் முழுவதும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, பிட் நோட்டீஸ், வாள்போஸ்டர், பேஸ்புக், தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று கோடான கோடி ரூபாய் செலவு செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஊடகங்களின் ஆதரவு இஸ்லாமியர்களுக்கு இல்லாததால் அப்பிரசாரம் தமிழக மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, வெகுஜென மக்களுக்கு சென்றடையவில்லை,

ஆனால் இந்த மழை ஒரே வாரத்தில் இந்துத்துவ இயக்கங்களின் 100 ஆண்டுகால பொய் பிரச்சாரத்தை தரைமட்டம் ஆக்கிவிட்டு இந்திய ஊடகங்களின் முகத்திரையையும் கிழித்து எரிந்து விட்டது.

அதற்கு காரணம் முகநூல் வாயிலாக செய்யப்படும் பிரச்சாரமே காரணமாகும்.

ஆகையால் இந்திய இஸ்லாமியர்களின் அரசியல் சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயல்படுங்கள் இல்லையென்றால் குறைந்த பட்ச அமைதியாவது கடைபிடியுங்கள்,

இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து என்றால் இந்திய முஸ்லிம் ரோட்டிற்கு வருகிறான், இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு நன்மை என்றால் இலங்கை முஸ்லிம் குறைந்தபட்சமாக வாயை பொத்திக்கிட்டுக்கூட இருக்க முடியாதா ..?

நீங்கள் என்னமோ மலக்குமார்கள் வீட்டிற்கும் பக்கத்து வீட்டில் பிறந்தது போல் ஹதீஸை தூக்கி கொண்டு வருகிறீர்கள், குர்ஆன் என்றால் ஹதீஸ் என்றால் என்ன என்பதெல்லாம் உங்களுக்கே கற்றுக்கொடுத்தது நாங்கள் என்பதை நினைவுப்படுத்தி விட்டு அந்த ஹதீஸ் சம்பந்தமான இலங்கை அரைகுறை லூசுகளுக்கு விளக்கமும் கொடுத்து விடுகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜக்காத் நிதியையே பொதுவான ஒரு நபரை நியமித்து தான் வசூலித்து வரச்சொன்னார்கள், அவ்வாறு வசூலிக்கப்பட்ட நிதியை பொதுஇடத்தில் வைத்து தான் ஏழைகளுக்கு விநியோகம் செய்தார்கள்.

ஆகையால் உங்களுடைய அரைகுறை மார்க்க அறிவை தூக்கி வீசிவிட்டு இஸ்லாம் என்ன சொல்கிறது என்று ஆய்வு செய்து தூய இஸ்லாத்தை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்,

இலங்கையை சேர்ந்த சிங்கள மொழி பேசக்கூடிய புத்த மத சகோதரன் கூட இந்திய இஸ்லாமியர்களின் பணியை கண்டு மெய் சிலிர்த்து பேசும்போது இலங்கை முஸ்லிம்களின் செயல்கள் முகம் சுளிக்க வைக்கிறது.

27 comments:

  1. இதற்கு காரணம் காழ்ப்புனர்ச்சிதான் ஏனெனி்ல் எனது முகநூள் அனுபவித்தின்படி நான் பல தவ்ஹீத் நண்பர்களை கவனித்தேன் அதாவது அவர்களுக்கு பீஜே மீது ஒரு கண்மூடித்தனமான வெறுப்பு இது இதர இயக்கங்களை நான் குறிப்பிடவில்லை அவர்கள் அடிப்படையிலேயே ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆனால் தவ்ஹீத் பேசித்திறியும் இந்த சஹோதரர்கள் சென்னை வெள்ள நிவாரனத்தில் ஈடுபடும் மற்ற இயக்கங்களின் பதிவுகளை ஷெயார் செய்கறார்கள் புகழ்ந்து பேசுகிறார்கள் ஏன் தர்காக்களின் பங்களிப்பை கூட ஷெயார் செய்கிறார்கள் ஆனால் tntj வின் பங்களிப்பை கண்டு கொள்ளவே இல்லை இதில் ஆச்சரியம் தவ்ஹீத் பயான்களை நடாத்தும் ஆலிம்மகள்கூட சிறுபிள்ளைத்தனமாக அடிப்படை கொள்கை அற்ற இயக்கங்களை பாராட்டி மகிழ்கிறார்கள் இது தவறு என்று கூறவி்ல்லை எவர்கள் நல்ல காரியங்கள் செய்கறார்களோ அவர்களை ஊக்குவிக்க வேண்டும் ஆனால் இவர்களை புகழ்வதற்கு ஏற்றுக் கொண்ட மனம் ஏன் tntj வினரை ஏற்றுக் கொள்ள இடம் கொடுக்கவில்லை என்பதுதான் புரியாத புதிராக உள்ளது ஒன்று மட்டும் தெறியும் அதாவது இவர்களின் உள்ளங்களில் பீஜே (எளஜிக்)தடுப்பூசி ஏற்றப் பட்டுள்ளது அதனால் எந்தவகையான செயற்பாட்டையும் நியாயமாக சிந்திப்பார்கள் என்று இவர்களை எதிர்பார்க்கவே முடியாது அல்லாஹ் இவர்களுக்கு நடுநிலையான என்னங்களை கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. U r extremely fool. Indian Muslim never get togather under one roof to get a political placment like Sri Lanka. This is the main reason for their setbacks.PJ is a terrorist who destroy Islam secretly. So, how he can create a good openion abt Muslim. U r too angry now bcz u are unable to gather money in the name of chennai victims to fill ur pocket.
    Not enough u get money from isral to destroy the Islam? Atop

    ReplyDelete
  3. என் காது கேட்காது. நான் அப்டித்தான் என்று அரைலூசுகள் ல சுத்திட்டு தான் இருக்குது சேர்.
    அவங்கட நெனப்பு நாமதான் ஒன்டா நம்பர் அவ்வூலியா னு.
    அவங்களுக்கு எந்த கேள்விகணக்குககளும் இல்லையாம் Vip வீசாவுல போரவங்கலாமே.

    ReplyDelete
  4. இலங்கையில் கந்தூரி சோத்துக்கும்,கபுறு வணக்கம் செய்யும் தொழில் வாரியாக வயிறு வளர்க்கும் மகூட்டத்துக்கு பொருக்க முடியாமல் செய்வதறியாது விரலை கடீக்கிரார்கள் மாற்று ஏமாற்றி வயிறு வளர்க்க ஏதாவது வழி தேடலாமா என்ற சிந்தனையில் மூழ்கியுள்ளார்கள் கபுறு வணங்கிகளே தௌபா செய்து மீண்டு வணங்கி வழிபட தகுதியான அந்த அல்லாஹ்வின் பக்கம் மீண்டு வாருங்கள் இல்லையேல் நாங்கள் உண்மையான அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கும் கூட்டம் என்பதர்க்கு நீங்களும் சாட்சியாக இருங்கள் .

    ReplyDelete
  5. Dear JM, Facebook itself is a rubbish. Please post things coming from authentic sources. Any devil can write anything in third party sites. According this person Sri Lankan Muslims learnt Quran, Hadith, etc. from them as if SL Muslims did not go to school.

    ReplyDelete
  6. "மனிதநேயம்" எங்கு, எப்போது, எப்படி காண்பிக்கப்பட வேண்டிய வரையறைக்குள் வருவதல்ல, ஒருவர் வாழ்வில் ஒவ்வொரு மூச்சிலும் காண்பிக்கப்படவேண்டியது. இதைத்தான் இஸ்லாம் நமக்கு கற்று தந்துள்ளது. இதை நாம் எம்முடைய பதிவுகளிலும்,, பின்னூட்டங்களிலும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மற்றவர் வருத்தப்படும் படியும் கேவலப்படும் படியும் இடப்படும் பதிவுகளும், பின்னூட்டங்களும் மனித நேயத்தை மீறும் செயலாகவே அமையும். இது நம்மை அறியாமல் பாவங்களை கொண்டு வந்தும் சேர்த்து விடும்.

    ReplyDelete
  7. Sahi sava & nizar......you both from where you came....??
    We know already that you both are supporter of Jewish...you are the agent of Israil....So, please do not disturb the Muslim unity in any ways.... You both are Sheithaans

    ReplyDelete
  8. TNTJ brothers commit themselves to a meritorious task in Tamilnadu with considerable energy. As Muslims, we should encourage them for Allah's sake. But contrary to that here some ignorant fellows uproar at their stupidity against the TNTJ. I urge the administrator of "Jaffnamuslim" not to publish any abusive & defamatory comments of these simpletons. Keep in mind always that slander is regarded as a fatal sin Islam and so that "Jaffnamuslim" should refrain itself from supporting such wrongdoings.
    May Allah safeguards all of us from such evils and wrongdoings!

    ReplyDelete
  9. இந்த கட்டுரையாளர் ஒரு இயக்க வாதி என்பது வெள்ளிடைமலை .இவரின் இயக்க வெறியை இலங்கை முஸ்லிம்களின் மீது திணித்து இந்தியாவில் போல் ஒவ்வொரு முஸ்லிமும் அடுத்தவர்களை (இஸ்லாத்தை சொல்கிறோம் என்ற பெயரில் மேடை போட்டு) விமர்சிப்பதற்கு முயற்சிக்கிறார் போலும். pj இலங்கைக்கு வருவதை தடை செய்தது மிகச்சரியானது (அல்ல்ஹா தடை செய்தான்). அவர் சொல்லும் கருத்தை நீங்கள் (இந்தியா) பின்பற்றி குர்ஆரான் ஹதீதுகளை விட்டும் தூரமாகிக்கொண்டு( 50 க்கும் அதிகமான பக்கா சஹீகான ஹதீதுகளை உங்களின் மர மண்டைகளுக்கு மாற்றமாக தென்படுகிதை குர்ஆனுணுடன் மோதுகிறது என்று சொல்லி லஹீபாக ஆக்கிகிக்கொண்டும், உங்களின் pj யின் சொந்தக் கருத்தை மார்க்கமாக நம்பி அவரை இமாமாக பின்பற்றி நடக்கும் நீங்கள் சொல்லுகிறீர்கள் “ நாங்கள் தான் இலங்கைக்கு இஸ்லாத்தை சொல்லிக் கொடுத்தோம் என்று ?என்ன வேடிக்கையாக உள்ளது.

    “””இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து என்றால் இந்திய முஸ்லிம் ரோடிட்கு வருவானாம்””” காதில் பூ வைதுள்ளவனுக்கு போய் சொல்லுங்கள்.இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க முன் உங்களை சுற்றி உள்ள முஸ்லிம்களுடன் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும் பழகுங்கள். முடியுமானால் உங்களை விட்டும் சமீபத்தில் சூனிய விஷயதில் கருத்து வேற்றுமை கொண்ட அப்பாஸ்அலியை உங்களின் மேடைகளில் ஏற்றி இஸ்லாமிய பிரசாரம் செய்யுங்கள் அவர் சூனியத்தை தவிர மற்ற எல்லா விஷயத்திலும் உங்களுடன் ஒன்று படுபவர் தானே. சூனியத்தை நம்பியவன் காபிர் என்று சொன்ன பிறகு உங்களின் பார்வையில் pj மதுகபு வாதிகளை தவிர உலகில் யாரும் முஸ்லிம்களாக இல்லையே.

    அவ்வப்போது மாற்று மத நண்பர்களோடு பிரச்சினைகள் தோன்றினாலும் அதிகாமான காலம் இந்தியாவில் நிம்மதியாக வாழ ஆசை பட்டால் எங்களை (இலங்கை) முஸ்லிம்களை பின்பற்றுங்கள்.நாங்கள் பிரச்சினைகள் வரும் போது எப்படி செயல் படுகிறோம் என்பதை படியுங்கள்.

    ReplyDelete
  10. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.அவர்கள் காசை அவர்களின் பாக்கெட் இல் போட்டுகொள்கிறார்கள் என்பதை நாம் கண்களால் காணவில்லை. அல்லாஹ் இவ்வாறான பாவங்களில் இருந்து என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக!
    “பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்தும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் கெட்ட எண்ணம் தான் பேச்சுக்களிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாய் இருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5143. -

    ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 6. -

    http://www.jaffnamuslim.com/2013/04/blog-post_1255.html?m=1

    ReplyDelete
  11. Facebook is rubbish!!! (Any others, who can come & shout at me so that I can grasp their good deeds and transfer to my account)

    ReplyDelete
  12. Aha mini minhaj...ilankai muslimgal pirachinai varumbothu payandhu othungi oduvarhal.neengalum oru iyakka wadhi than.
    Tabligh..jamathe islami..tawheed all are now likes clubs. If they seen some other sect even no salam.tabligh jamath atleast good with low level people. This jamathe islami guys only salam and other activities them only.tawheed jamath also within there jamath only.so which one is represent true islam.normal individuals confused.

    ReplyDelete
  13. எந்த ஒரு நற்செயலும் புகழுக்காகவும் தட்பெருமைக்காகவும் செய்வது வீனானதாகும் அதற்காக தங்களை தாங்களே புகழ்ந்து மற்றவர்களின் சேவைகளை இருட்டடிப்பு செய்து தமது இயக்க அப்பாவி மக்களை பயன்படுத்தி அடுத்தவர்களுக்கு எதிராக காழ்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்குவது கண்டிக்க தக்கது

    ReplyDelete
  14. தற்போது TNTJ னர் மேற்கொள்ளும் வெள்ள நிவாரணம், மீட்புப் பனி , சிரமதானம் - இதனை காழ்ப்புணர்ச்சியோடு பார்ப்பவர்கள் அல்லது கொச்சைத்தனமாக எழுதுபவர்கள் மனநோயாளிகலாகத்தான் இருக்க முடியும். இவ்வாறு ஓரக்கண்ணால் பார்த்து பேசுபவர்கள் ஒரு போதும் முஸ்லிம் சமுகத்தை ஒன்றிணைய விட மாட்டார்கள். எப்பவுமே முஸ்லிகளை பிரித்து வைத்து குழப்பத்தை உண்டு பண்ணி அதில் அவர்கள் சுகம் காண்பார்கள். இவர்கள் தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு இஸ்ரேலின் ஏஜென்டாக செயல்படுகிறார்கள். இவர்களை இனங் கண்டு கொள்ள வேண்டும். அவர்களை சமுகத்திலிருந்து புறக்கணித்து ஒதுக்கி வைக்க வேண்டும்.
    அடுத்தது, இந்திய முஸ்லிகளின் களமும் ,சூழ்நிலைகளும் வேறு . இலங்கையில் எமது களமும் சூழ்நிலைகளும் வேறு. இரண்டையும் ஒன்றோடொன்று படுத்தி பார்க்கவும், குழப்பவும் கூடாது.
    இந்த மழையும், வெள்ளமும் அதனோடு இடம்பெறும் நிகழ்வுகளும் அங்குள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கு சாதக நிலைமையை உருவாக்கியுள்ளது. இது இறைவனின் ஏற்பாடாகக் கூட இருக்கலாம். PJB, RSS, சிவசேன, இந்து முன்னணி போன்ற இந்துத் தீவிரவாத அமைப்புகள் இந்திய முஸ்லிகளுக்கு தீவிரவாதி என்ற முத்திரை குத்தி, திட்டமிட்டு பல வழிகளில் முஸ்லிம்களை பழிவாங்குகிறார்கள். ஒரு முஸ்லிமை கொல்வதற்கு பெரிதாக ஒன்றும் மாஸ்டர் ப்ளேன் போடவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. அவன் மாட்டிறைச்சி சாபிட்டான் என்று ஒரு பொய் சொன்னால் போதும், அடுத்த நிமிடம் பொய் குற்றம் சுமத்தப்பட்டவன் பிணமாய்க் கிடப்பான். அவன் பக்கமுள்ள நியாயத்தை சொல்வதற்கு கூட நிமிடங்கள் கொடுக்கப் பட மாட்டாது. ஒரு ஊரையே கொன்று குவிப்பதேல்லாம் அவர்களுக்கு அல்வா சாபிடுவது போன்று செய்து முடிப்பார்கள்.ஒரு இந்துத் தீவிரவாதி ஒரு இந்துப் பெண்ணை கடத்தி, கற்பழித்து, கொன்று அந்த உடலை முஸ்லிம் ஊர் எல்லையில் வீசி விடுவான். அடுத்த நாள் அந்த முஸ்லிம் ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் மரணத்தின் ஓலங்களை ஒலித்துக் கொண்டிருக்கும்.
    நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, மனித நேயமிக்க மகத்தான தீனுக்கு சொந்தக் காரர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரு இந்திய முஸ்லிமும் இருக்கிறான். பல தடவைகள் அவர்களால் நிரூபிக்கப் பட்ட போதும் காவி நிறக் கேமராக்களினால் அவைகள் மூடி மறைக்கப் பட்டன. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டன. சமூக வலைத் தளங்களின் ஆக்கிரமிப்பு உண்மையை உலகுக்கு வெளிக்கொண்டு வந்துள்ளது. மெய் சொல்ல மறுக்கும் மீடியாக்கள் முக்காடு கட்டிக் கொண்டு வேறு வழியின்றி கொஞ்சமேனும் உண்மையை சொல்லா விட்டால் உலகம் எங்களை காரி துப்பும் என எண்ணி, அங்கொன்றும் இங்கொன்றுமாக முஸ்லிம்களின் மனிதநேய நற்பணியை தமது செய்திகளிலும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
    இந்த நிலையில் முஸ்லிம்கள் மேற்கொள்ளும் சேவையை, நற்பணிகளை, மனித நேயத்தை முஸ்லிமல்லாத சகோதரர்களே போற்றி புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
    முஸ்லிம் பணக்காரர் அவருக்கு ஒரே புதல்வன்- அந்தப் புதல்வன் வீதியிலே குப்பை அள்ளுகிறான். இன்னுமொருவன் முடியாத வயோதிபர்களை சுமந்து செல்கிறான்.மற்றுமொருவன் நீரில் இறங்க முடியாத பெண்களுக்கு வயதானவர்களுக்கு தன தோல் கட்டை படிக்கட்டாக கொடுத்து காப்பாற்றுகிறான். கழுத்தளவு நீரில் நீந்திச் சென்று , சாப்பாடு கொண்டுவந்துள்ளேன் யாரேனும் இருக்கின்றீர்களா என கூவி அழைத்து உணவூட்டுகிறான். இதனைப் பார்க்கும் மாற்று மத சகோதரங்கள் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் நன்றியை வாய் வார்த்தைகளில் சொல்ல முடியாமல் கண்களிருந்து வரும் கண்ணீர் சொல்கிறது, "இனிமேல் இந்துவும் முஸ்லிமும் சகோதரர்கள் எங்களை பிரிக்க எந்த இந்துத் தீவிரவாதியும் வருவானேயானால் அவனை கூட்டுமாரால் அடித்து விரட்டுவோம்".
    ஆக, அந்த சகோதரர்கள் அல்லாவுக்காகதான் செய்கிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதற்க்கான கூலியை இறைவனிடமே எதிர்பார்கிறார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை. என்றாலும் அவர்களுக்கு இதற்க்கான சிறு விளம்பரம் தேவைப் படுகின்றது, அது அவர்கள் மீதுள்ள தவறான முத்திரையை கழற்றுவதற்கு ......
    இவர்களை குற்றம் குறை காணாதீர்கள். தவறுகள் இருப்பின் அது மனிதனுக்கு இயல்பானவை. உங்கள் வார்த்தைகளால் அவர்களை சாகடிக்காதீர்கள். அவர்கள் சேவையை மெச்சுங்கள்.மென்மேலும் ஊக்கத்தையும் தைரியத்தையும் கொடுங்கள். முடிந்தால் ..முடிந்தால் நீங்களும் சென்று களத்தில் அவர்களுக்கு தோல் கொடுங்கள் . இரவு பகலாக பம்பரமாய் சுழன்று ஓடியோடி சேவையாற்றிக் கொண்டிருக்கும் உன் சகோதரன் சற்று இளைப்பாரட்டும். .....

    ReplyDelete
  15. அமைதி காப்பதே அனைவருக்கும் நல்லது.

    ReplyDelete
  16. இது எதிர்பார்த்ததுதான்.... வெள்ளம் வடிவதற்கு முன்னரே, நாம்தான் வெள்ளத்திற்கு உதவினோம் என்கின்ற பிரச்சினை இஸ்லாமிய அமைப்புகளுக்குள் ஆரம்பமாகி விட்டது.

    அதனையே சற்று விரிவுபடுத்தி, நாம்தான் மலை தேடி அல்லாஹ்வினடம் பிரார்த்தித்து வேள்ளத்திற்கே ஏற்பாடு செய்தோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

    ReplyDelete
  17. Mr. Mini Minhaji and Mr. Nizar
    you may no I ma not a TJ supporter, you may seen my comment. But here I am so sorry that you both are Talking the subject is not concerning about above article. here I agree with above article. we must accept TNTJ doing remarkable job which even non Muslims too praised.because our deference's we should not undermine the good work anybody doing. These are the time should forget all deference's look at them as Muslim doing which could expel the wrong notion about the Muslim.They opened all the Masjid for the affected people. this greatest meritorious act. When we bickering and giving some bad name for such an act is sell out of Muslim communities. So please stop such and low level criticism of good work. YES Minhaji Tamil Nadu Muslims came to the street to agitate in front of Srialnkan Embassy when Dharga Town incident.Most of them are arrested including a women.So they had some concern about Srilankan Muslims. But no such and agitation took place in Pakistan support of Muslims here. Where were you then not see the Tv News. But you sarcastically replied for that. So do not try to undermine this great work because our deference's.It will give some Clues to Anti Muslim elements to attack Muslims. We must keep in mind that Indian Muslims are living in a very hostile atmosphere than Srilanka. So What above article's request is correct.

    ReplyDelete
  18. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். நிலவனுக்கும் அப்படித்தான் போலிருக்கு.

    ReplyDelete
  19. Hussain, We r not against their good work but their overflowing advertisement as there r side effects. I too do not forget the protest at the time of Darga town attack even though their group in SL can b one of the reason for such attacks.

    ReplyDelete
  20. Allah vukku mattuma intha udavee enpathai allah velikattuvaan.a.enavea naam mudinthal nallathu seiyya allah vidam duwa seiyyvam.wsm

    ReplyDelete
  21. பேரிடர் நேரம் ஓடிப்போய் உதவிய மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவை ஊடகங்களில் தெரிவித்ததும் தப்பில்லை.
    ஆனால்
    குரஆன் ஹதீஸ் பற்றி இலங்கை முஸ்லிம்களுக்கு சொல்லித் தந்தது நாங்கள் தான் என்றூ சவடால் விடுவது சிறுபிள்ளளைத் தனம்.
    இலங்கை முஸ்லிம்களுக்கு ஒன்று என்டால் ஓடி வருவது நாங்கள்தான் என்பது வெறும் வார்த்தை ஜாலம். வட மாகாணத்திலிருந்து எம்மவர் விரட்டப்பட்டு 25 வருடங்கள் ஒடிவந்ததவர்கள் எங்கே என்று தேடிக்கொண்டருக்கின்றாேம்.
    இஸ்லாத்தை போதிக்கும் வேளை அழகான வார்த்தைகளைக் கொண்டு அழைப்பது நபிவழி இதை நான் தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சுக்களில் கேட்டதில்லை.
    தவ்ஹீத் ஜமாஅத் தான் இஸ்லாத்தை சரியாகச் சொல்கிறது என்றால் ஏன் அதற்குள்ளேயே பிரிவினைகள். யார் சரி யார் பிழை.
    உங்களை முதலில் சரி செய்து கொண்டு ஊரை திருத்தலாமே

    ReplyDelete
  22. @shafraz khan
    aamam naanum oru iyakka wathithan aanal iyakka very illai. Bro.Don’t make under estimate about srilankan Muslim they runaway form problems. we have ACJU according to there instruction we are fallowing islam in srilanka(which you mention all jamath groups included in ACJU).thatswhy the indiyan tamil nadu jammiyathul ulamas visit to srilanka few month back for discuses about activities of ACJU in Srilanka.

    @Imthiyas Hussain
    I never denied about TNTJ social service.(1st work started by Tamil nadu masjidkalin sammelanam announce the masjid to open to stay for everyone then TNTJ started) it must be do accept and appreciate them .i agree with you that we need to forget all deference when one muslim involve and doing good deeds to allha’s creation. it can be human or not. If we can appreciate the NGO & Red Cross why we cant support & praise for muslim groups. . You may refer my 1st commend on ( Singalawarkalukku mathiyail islam pattri piracharam saywathai tadukka wendum ) http://www.jaffnamuslim.com/2015/12/sltj_10.html . i praise the tamil nadu muslim. This is not my view point in my comment.

    I agree 100% with Bro. Abu Aamidh .he replied some of your comment .here i add few more.
    Bro. Imthiyas Hussain you can agree with article but iam not agree which i point out in my comment.
    1.Araival of Bro.PJ to srilanka
    2.indian teached quran & hadeed to Srilankan
    3. The unity of muslim
    I said about PJ , teaching about quran & hadeed and how they are now and the unity of muslim. Before supporting your neighbour country, support to your nearest Muslim . Bro Imtisyas which i said is true in my comment if wrong you can correct it. Allha will guide us right path aamen

    ReplyDelete
  23. Dear brothers...what about jamathe islami and tabligh jamath doing.they only doing with there members .why they are not doing like these kind of works. Am not a tawheed member. But just curiosity. .asking.

    ReplyDelete
  24. yes we cant question about their work "why you dint" but if someone done good deed we must appreciate it is a sunna (“Whoever does not give thanks to the people does not give thanks to Allaah” a saheeh hadeeth narrated by Imaam Ahmad, 2/258).

    Bro. as far as my concern every Islamic Groups are benefits to the mankind (social service /Islamic activities)Specially for Muslims but if we fight each other for petty petty issue then we lost benefits of groups and break the unity of Muslim. Every person has difference opinion when they read the quran & hadeed (it means not quran or hadeed mistake, it is our mind problem) tell your opinion but don’t insult against who give the fathwa or commentary .
    i hope you understand about my view allha gran us the hidayath Ameen.

    ReplyDelete
  25. Bro Mini Minhaj! Nice comments but I just want to clarify something.
    The Unity of Muslims- Should be based on Al Quran and Sunnah! We have to tell the truth ( by telling the truth even the ummah is gonna be divided )

    Where some People ( Jamaaths) Put Unity before the Islam and Sunnah.

    ReplyDelete
  26. Mr. Minhaji
    I again say that Above article and your criticism are deference. I too against PJ's arrival to Srialnka. But above article is to have innocent request to keep silence or not to criticize their good work on basis of deference's.suppose they are not Muslims and doing good work must be appreciated.
    But you told this is the idea of "ivarkalin eyakka veriay Ilankai muslimkal meedu thinikka mutpadukirar" is not aceptable. it is shows your "Iyakka very"on them (Sectarianism")
    secondly You laugh, when they said THey came to street when Srilankan Muslims are in trouble. Yes they agitated and got arrested including Women.When Dharga town incident.
    Thirdly
    THis is not PJ new ideas. what they are teaching is Muhammed Ibnu Abdul Wahhab's teaching.
    I full agree with what Sahib deen says. So this article and Your comment are deference.

    ReplyDelete
  27. السلام عليكم ورحمة الله وبركاته
    சத்திய இஸ்லாத்தை இவ்வுலகில் ஓங்கச்செய்வதற்காக யார் யாரெல்லாம் பாடுபடுகிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் எவ்வித கட்சிபாகுபாடின்றி, இயக்க பாகுபாடின்றி, சாதிமத வேறுபாடின்றி ஆதரவளித்து, لاإله إلاالله محمدالرسول اللهஎன்ற கலிமாவின் ஓசை உலகெங்கும் கேட்க பாடுபடவேண்டியது முஸ்லிமாகப்பிறந்த நம் அனைவரதும் கட்டாயக்கடமை.
    நான் பிறந்தேன் நல்லதொரு சமுதாயத்தில். நான் வளர்ந்தேன் நல்லதொரு தாயின் மடியில். நான் பெற்ற குர்ஆனும் நபிகள் வாழ்வும், நீடித்து வாழுமென நம்புகின்றேன்.
    நான் வாழும் இவ்வுலகின் போக்கை கண்டு, நாளை என் கதியென்ன ஏங்குகின்றேன். வாளெடுக்கும் திறனுண்டு என் கரத்தில். வழிசொல்லிக் காட்டத்தான் மக்கள் தேவை.
    எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் பரிசுத்த எண்ணத்துடன் தூய கலிமாவின் கீழ் ஒற்றுமையாக செயல்பட வழிவகுப்பானாக.
    Shaikh Sulaiman Ben Riyadh Abunauba as-seyalaani Mumbai
    Co-ordinator :www.quraaniclessons.com
    Mail :khadhim700@gmail.com nauba@mail.com
    Mobile. +919962386563 /7038794204

    ReplyDelete

Powered by Blogger.