"இன முரண்பாடுகளைத் தூண்டும், உரைகளைத் தடுக்கும் சட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்"
இன முரண்பாடுகளைத் தூண்டும் உரைகளைத் தடுக்கும் சட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று பிரதியமைச்சர் கருணாரத்தின பரணவித்தாண தெரிவித்துள்ளார்.
இன முரண்பாடுகளைத் தூண்டும் உரைகளுக்கு குற்றவியல் மற்றும் தண்டனணக்கோவை சட்டங்களின் பிரகாரம் தண்டிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டமூலம் தற்காலிகமாகவே வாபஸ்பெறப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தின் பிரகாரம் அவ்வாறான உரைகளைப் பிரசுரிக்கும் ஊடகங்களும் தண்டிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளதாக பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதனை ஏற்றுக் கொண்டே குறித்த சட்டமூலத்தைத் தற்காலிகமாக பிற்போட்டுள்ளோம்.
ஊடகங்களின் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்நாட்டில் வாழும் அனைத்து இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த சட்டமூலம் சில திருத்தங்களுடன் மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் பிரதியமைச்சர் கருணாரத்தின பரணவித்தாண தெரிவித்துள்ளார்.
Post a Comment