யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு, கல்வி அமைச்சு அதிகாரிகள் விஜயம்
-பாறுக் ஷிஹான்-
யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு தேவையான அபிவிருத்திகளை கல்வி அமைச்சு மிக விரைவாக மேற்கொள்ளவுள்ளது.
நேற்றைய தினம் யாழிற்கு வருகை தந்த கல்வி அமைச்சு அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
இதன் போது கல்லூரியின் அதிபர் எம். அஸ்ரப் பாடசாலை தேவை தொடர்பில் பல தகவல்களை குறித்த அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
அத்துடன் பாடசாலைக்கு ஒரு தொகுதி நூலும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இச்சந்திப்பில் அமைச்சின் சார்பாக முஸ்லீம் பாடசாலைகள் அபிவிருத்தி கிளை கல்விப்பணிப்பாளர் இஸட்.தாஜூதீன்,திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஆர்.எம் ராபி ,ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் றஹீம்,சமூக சேவகர் நஸீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment