Header Ads



வசீம் தாஜுதீனின் படுகொலை, முக்கியஸ்தர்கள் சிக்குவர் - அடித்துக்கூறும் ராஜித்த

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் முக்கியஸ்தர்களில் சிலர், மிக விரைவிலேயே சிக்குவர் என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இக்கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட டிபென்டர் ரக வாகனம் யாருடையது, பிரதான சந்தேகநபரான சாரதி, யாருடைய சாரதியாகக் கடமையாற்றிவர் என சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரபல றகர் வீரர் வசீம் தாஜூதினின் படுகொலை தொடர்பான விசாரணை, மிக விரைவிலேயே முடிவடையவுள்ளது. விசாரணைகள் நிறைவடைந்ததும் முக்கிய புள்ளிகள் சிலர் கைதுசெய்யப்படுவர் என்றார்.

தற்போது நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவேண்டியுள்ளது. ஆனால் இவ்வாறு கைதுகள் தொடர்பில் அச்சம் கொண்டுள்ள கடந்த ஆட்சிகாலத்தில் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தை குழப்புவதற்கும் வீண் பிரச்சினைகள் ஏற்படுத்தவும் முயற்சிக்கப்படுகிறது.

குற்றச்சாட்டுக்கள் மற்றும் கைது சம்பந்தமான விவகாரங்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குற்றச்சாட்டுக்களுடன் சம்பந்தப்பட்டோர் மேற்கொண்டுள்ள இறுதி முயற்சியையும் நாங்கள் தோற்கடிப்போம்.

வடக்கிலுள்ள பெற்றோர்கள் நிம்மதியாக உறங்கும் நிலைமையும் முஸ்லிம்கள் சுதந்திரமாக தமது மத வழிபாடுகளில் ஈடுபடவும் உணவு முறைகளை விரும்பியபடி மேற்கொள்ளவும் நல்லாட்சி அரசாங்கமே வழிசமைத்தது எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

1 comment:

  1. நீங்கள் ஒரு சிறந்த நற்செய்தி வழங்குபவர் இந்நாட்டிலே ..

    ReplyDelete

Powered by Blogger.