ரவிக்கு நெத்தியடி கொடுத்த ரணில்
-LNW-
வரவு செலவு திட்டம் ஏற்படுத்தியுள்ள குழப்பம் ஐதேகவின் உள்ளக தரப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. வரவு செலவுத் திட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க செய்த மாற்றங்களில் ஏற்பட்டுள்ள 7000 மில்லியன் செலவை எப்படி சரிசெய்து கொள்வது என்று ஆராய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அலரிமாளிகைக்குச் சென்று பிரதமரை சந்தித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனையை ரவி இங்கு முன்வைத்துள்ளார். அதற்கு பதில் அளித்த பிரதமர், 'அது என்ன பைத்திய வேலை. 7000 மில்லியனை தேட வழியில்லை கேலிபேச வேண்டாம். அப்படி செய்தால் முழு நாடும் வீதியில் இறங்கும். இப்போது நடப்பது தெரியும்தானே. தயவுசெய்து புதிய பிரச்சினையை கிளப்பாமல் இருக்கவும்' என்று கூறியுள்ளார்.
பின் கருத்து தெரிவித்த ரவி, 'டொக்டர்மாரின் பிரச்சினைக்கு என்ன செய்வது?' என்று கேட்டுள்ளார். 'அதை கொடுக்க நாம் இணங்கியுள்ளோம். கொடுக்கவும்' என்று பிரதமர் பதில் தெரிவித்துள்ளார். 'அதை எப்படி வழங்குவது முடியாது வேண்டுமானால் மாதாந்தம் 25000 ரூபா கொடுப்பனவு வழங்குவோம். இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் உரிமை அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். அவர்கள் சேவையை விட்டுச் செல்வதாயின் வாகனத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும்' என்று ரவி குறிப்பிட்டுள்ளார்.
ரவி கருணாநாயக்கவின் நடவடிக்கையால் கோபமடைந்த பிரதமர் ரணில், 'அயம்த பாட்டி லீடர். யு வோர் எக்கோடிங் டூ மை இன்ஸ்ரக்சன்' (நான் கட்சித் தலைவர். நீங்கள் என்னுடைய பணிப்பின் கீழ் பணியாற்றவும்)' என்று கூறியுள்ளார். சந்திப்பின் பின் இருவரும் கைகுழுக்கி சிரித்த வண்ணம் சென்றனர்.
Post a Comment