Header Ads



ஊழல் மோசடி செய்தவர்களுக்கு, உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் இல்லை

ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட எவருக்கும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்தர்ப்பம் அளிக்காது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்த பிரதேச சபை தலைவர்கள், நகர பிதாக்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வேட்பு மனு வழங்குவது என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் கட்சியின் நன்மதிப்பை பாதுகாக்கும் நோக்கிலும் மக்களுக்கு சிறந்த முறையில் சேவையை வழங்கும் நோக்கிலும், ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட எவருக்கும் வேட்பு மனு வழங்குவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்படி, கட்சி ஒழுக்க விதிகளை மீறிய எவருக்கும் இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது.

கட்சியை வலுப்படுத்தி எந்தவொரு தேர்தலின் போதும் வெற்றியீட்டக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவதே தமது நோக்கம் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அப்ப இப்ப இருக்கிற யாருக்குமே போட்டியிட முடியாதே!
    நம் நாட்டில் நடைமைப் படுத்த முடியுமான சட்டங்களை கொண்டுவாருங்கள்.
    மக்களை ஏமாற்றுவதிலேயே இருக்கிறார்கள் இந்த மானம் கெட்ட அரசியல்வாதிகள். மக்களும் வழமைபோல் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.