Header Ads



'அமைதியை நோக்கிப் பயணிக்கும், நாடுகளின் வரிசையில் இலங்கை'

விரைவாக அமைதியை நோக்கிப் பயணிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

விஷன் ஓப் ஹ்யூமனிட்டி அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான சர்வதேச அமைதி நாடுகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறித்த பட்டியலின் பிரகாரம் இலங்கை, மொங்கோலியா, இஸ்ரேல், சாட் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகள் உள்நாட்டு யுத்த சூழ்நிலையிலிருந்து விடுபட்டு விரைவாக அமைதியான நிலைக்குத் திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 114வது இடமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இலங்கையானது தொடர்ந்தும் மிக  ஆபத்தை எதிர்கொண்டுள்ள அமைதி உருவாகும் நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே தெற்காசியாவின் அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கைக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளன.

உலகின் மிகவும் அமைதியான நாடாக ஐஸ்லாந்து பெயரிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.