Header Ads



இலங்கை பெண்ணின், மரண தண்டனை ஒத்திவைப்பு

திருமணத்துக்கு முரணான உறவைக் கொண்டிருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கல்லால் எறிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதை, சவூதி அரேபிய அரசாங்கம் பிற்போட்டுள்ளது. 

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பாக ஆராயப்படும் வரையிலேயே, இந்தத் தண்டனை பிற்போடப்பட்டுள்ளது.nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே, சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தால் மேற்கொள்ளப்பட்ட முறையீடு, சவூதி அதிகாரிகளிடம் பதியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்றிருந்ததோடு, அரச, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், இத்தண்டனைக்கெதிரான தங்களது குரலை எழுப்பியிருந்தனர். 

இதில், இப்பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்களை அனுப்புவதை இலங்கை இடைநிறுத்த வேண்டுமென, பிரதியமைச்சர் அஜித் பி பிரேரா தெரிவித்திருந்தார். 

பெயர் குறிப்பிடப்படாத குறித்த பெண்ணுக்குக் கல்லால் எறிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரோடு தொடர்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கையருக்கு, 100 கசையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. சவூதி அரேபிய நாடாக இருந்தாலும், ஸ்ரீலங்கா நாடாக இருந்தாலும், யார் தப்பை செய்தாலும், நாங்கள் தப்பை தப்பு என்று தான் சொல்லுவோம், அதனை ஒரு நாளும் சரி என்று சொல்ல மாட்டோம்.

    எங்கள் எல்லாரையும் படைத்த ரப்பு ஏழு வானங்களுக்கு மேலால் இருந்து இறக்கி வைத்த சட்டம், அதனை பூமியில் வாழும் யாருக்கும் பயந்து மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை.
    "என் மகள் பாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன்" என்றுதான் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். இந்த பெண் திருமணம் செய்து பின்னர் விபச்சாரம் செய்தால், அல்லாஹ்வின் சட்டம், கல்லால் எரிந்து கொல்லப்பட வேண்டும். இதனை செய்வதை விட்டும் எதுவும் ஒரு முஸ்லிமை தடுக்க கூடாது.

    ReplyDelete
  2. Brother Anver 100% correct
    In addition if she release from KSA government she will get more punishment in her environment. Sariya going to kill her one time on the sport but these unknown people who not knowing about Sariya are going give her life time punishment by bad words
    They want to raise the voice against Sri Lankan Government not for KSA
    If they said stop to sending House maid to Abroad that is reasonable one is returning 100 coming

    ReplyDelete
  3. Yes, she comitted a crime. But it is not meant to a crime for which a woman must be stoned to death. The letter clearly explain the necessity to revoke the verdict as the convict is a responsible person for her dependants and family. Satan even will melt down for the reasons drawn in the letter. Let’s see whether it will melt the big ones. The are many valid reasons, on that grounds, she must be released rather stoning the woman to death in a brutual way. When there are so many valid reasons as stated in this letter that killing a women by stoning her to death, may be not a right way in civilized world, how such a verdict could be fair and justifiable in Islam as Islam being a peasefull relgion and rightious? If everything is according to islamic law in Saudi, one could ask that which Islamic law permit them to keep a foriegn woman at their house without her family or her rightfull gaurdian, or even we can ask which islamic law allow them to appoint a foreign man as a driver to their women. It sounds like there are misinterpreted version of Islam practiced in many places in the world by extremist elements and even by such rogue states in their own favor.
    Many things are inherited into our bleive from our ancestors or from the socity that we are in. Unless we get out of inheritance circle, we will not be able to see the true islamic way of living

    ReplyDelete
  4. சபியுத்தீன் என்னும் அல்லாஹ்வின் அடியானே, எழுவானங்களுக்கு மேலால் இருந்து அல்லாஹ் வழங்கிய சட்டம், அதை செய்ய தேவையில்லை என்று எந்த மனிதனும் பேசுவது, அவனை படைத்த ரப்பை கொபமாக்கும் செயலாகும். அல்லாஹ்வின் சட்டத்தை ஒரு முஸ்லிம் எப்பொழுதும் ஹைராகவே காண்பான், அதில் அட்ஜஸ்ட் செய்யவோ, ஷர்ரை காணவோ மாட்டான். அல்லாஹ்வின் சட்டம் செய்யும் மனிதனை, சைத்தானின் சட்டங்களை சரி என்று காணும் நாகரிக மனிதன் பார்த்து காட்டுமிராண்டி, பயங்கரவாதி என்று சொன்னதற்காக, அவன் அப்படி ஆகவும் மாட்டான், அல்லாஹ்வின் சட்டத்தை செயல்படுத்துவைதில் பின்வாங்கவும் மாட்டான்.

    ReplyDelete
  5. 2015.12.07 கிரு டீவி இரவு 9.30 சிங்களச் செய்தியைப் பாருங்கள் பாராளுமன்றத்தில் பிமல் ர்தநாக கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது பிரதி அமைச்சர் ரஞ்ஞன் ராமனாயக்கவே தெரிவிக்கிறார் அந்தப் பெண் தான் விபச்சாரம் செய்ததை ஒத்துக் கொண்டதாகவும் அதைப் பற்றுப் பேசினால் தான் தற்கொலை செய்து கொள்வதாக சொன்னதாகவும் அற்தக் குற்றத்திற்கு அல்லாhவிதித்த அல்லது சவுதி நாட்டின் சட்டத்தின் அடிப்படையிலான தண்டணை அதுவென்றால் நாம் எப்படி தலையிடுவது விடுவிக்கச் சொல்லி இந்த விடயத்தில் அன்வர் அலி சொல்வதில் நான் உடன்படுகின்றேன் அனால் நானும் முஸ்லிம் அதற்காக நாம் இறைவனின் சட்டத்தில் உள்ள உண்மை நியாயத்தை விளக்காமல் பிடிவாதமாக சொன்னால் மற்றவர்களுக்கு விளங்காது இதனால் மார்க்க அறிஞ்ஞர்கள் முதலில் மார்க்கத்தை சரிவரக் கற்று அதை நியாய பூர்வமாக நவீன தொழிநுட்பத்தைப் பணன்படுத்தி விளக்க முயல வேண்மே அன்றி சும்மா இறையச்சத்தை மாத்திரம் சொல்வதால் முஸ்லிம்கள் அடங்குவார்களே; அன்றி மாற்றுக் கொள்கையுள்ளவர்கள் இந்த மார்க்கத்தின் சுவையை உணரும் வாசல் திறக்கப்படாது இதற்கும் சிலர் சொல்லுவார்கள் நேர்வழி கொடுப்பவன் அல்லாh என்று அப்ப என்னத்துக்கு இறைவனே வானம் பூமி மற்றும் பல அன்று மக்களுக்குப் புரியாத ஆiமான விஞ்ஞான கருத்துக்களை திருமறையில் எடுத்துக் காட்டிச் சிந்திக்கக் சொல்கிறான்? சொல்வதும் அதை முறையாகச் சொல்வதும் நமது கடமை அதைப் புரியவைப்பதும் ஏற்றுக்கொள்ளவைப்பதும் படைத்தவன் வேலை என்றுதான் கொள்ளவேண்டுமே தவிர நான் தெளிவாகச் சொல்லவும் மாட்டேன் படிக்கவும் மாட்டேன் என்பது மடத்தனம் உங்களுக்கு ஓர் விடயம் தெரிந்தால் அதை மற்றவர்களுக்கு எத்திவைப்பது இறைத்தூதர் நமக்குக் பணித்த பணி என்பதை மார்க்கத்தின் பட்டங்களை தன் பெயரின் பின்னால் போடும் உலமாக்கள் உணர்ந்து கொண்டால் நன்று

    ReplyDelete
  6. 100% correct brother Anver. May ALLAH bless you.
    ஒருவர் அவரது தேவைக்கேற்ப இஸ்லாத்தில் சலுகைகளும், ஆதாரங்களும் தேடத் தேட அல்லாஹ் அவருக்கு வழிகேட்டிற்கான கதவுகளையே திறந்து திறந்து கொடுப்பான். நஊதுபில்லாஹி

    ReplyDelete

Powered by Blogger.