சிங்ஹ 'லே' ஸ்டிகரும், ஒடுக்கப்பட வேண்டிய இனவாதமும்
-பா. அம்ரா-
உள்ளே இருக்க வேண்டியவர்கள் வெளியே இருந்தாலோ வெளியே இருக்க வேண்டியவர்கள் உள்ளே இருந்தாலோ சமாதான விரும்பிகளுக்குப் பிரச்சினை தான்.
மஹிந்த அரசு போசித்து வளர்த்த இனவாத்க்குழுக்கள் மஹிந்தரின் தோல்வியின் பின்னர் சற்று அடங்கியிருந்தாலும் தற்போது ரணில் - மைத்ரி நல்லாட்சியிலும் தமது அராஜகத்தை தமது வழமையான பாணியில் முன்னெடுக்கத் துவங்கியுள்ளன. சிங்ஹ லே ' சிங்க இரத்தம்' என்ற கோஷத்தோடு இவர்கள் தமது வாகனங்களில் குறித்த வசனத்தைத் கொண்ட ஸ்டிகர்களை ஒட்டிக்கொண்டு வலம்வருவதைக் கான முடிகிறது.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி பல்வேறு அமைப்புகளும் வேண்டிக் கொண்டாலும் கடும் போக்கு வாதிகள் நாடு தழுவிய ரீதியில் போராட்ங்களை முன்னெடுத்தால் விளைவுகள் எங்கும் போய் முடியுமோ என்ற பயத்தினால் அரசு இவர்களைக் கைது செய்யவோ வேறு நடவடிக்கைகள் எடுக்கவோ தயங்குகிறது. தேர்தல் முடிந்த கையோடு உள்ளே போகவேண்டியவர்ளை உள்ளே தள்ளியிருந்தால் விளைவுகள் இந்தளவுக்கு வந்திருக்காது. அனைவரையும் அரவணைத்து செல்வது நல்லாட்சியின் முக்கியமானது பண்பாக இருக்க வேண்டியது போலவே குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதும் அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதும் நல்லாட்சியின் முக்கிய பணியே!
தற்போதே அரசு உடனடியாக செயல்பட்டு இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் எதிர் வரும் காலங்கள் முஸ்லிம்களுக்கும் அரசுக்கும் மிக மிக சவாலானதாகவே அமையப் போகிறது. மஹிந்தருடன் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகாவை தேர்தல் முடிந்த கையோடு தைரியமாக மஹிந்த அரசு எப்படி உள்ளே தள்ளியதோ அதே போல இன்றைய அரசும் உள்ளே செல்ல வேண்டியவர்கள் உள்ளே அனுப்பிவிட்டு அதன் பின்னர் தோன்றும் என எதிர் பார்க்கப்படும் அசாதாரண சூழ்நிலையை இரும்புக் கரம் கொண்டு அடக்க முன் வர வேண்டும். அப்படி இந்த அரசு செய்ய முன் வந்தாலேயன்றி இவ்வரசுக்கு இனவாதிகளை கட்டுப்படுத்துவதென்பது கஷ்டமான காரியமாகவே இருக்கப் போகிறது.
Well said.
ReplyDeleteSame time govt having different ideas about this matter
ReplyDeletePresent Govt. is inefficient to handle the National Issues.......................................................
ReplyDelete