புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான, கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு
புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளன. வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்கான கட்டணமாக 10,000 ரூபா அறவிடப்படவுள்ளது.
இதுவரையில் குறித்த கடவுச் சீட்டுக்கு 7,500 ரூபா பணமே அறவிடப்பட்டது.
மேலும் சாதாரண சேவையில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்கு இதுவரையில் அறவிடப்பட்ட 2,500 ரூபா கட்டணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் கடவுச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஒருநாள் சேவையூடாக கடவுச் சீட்டை விநியோகிப்பதற்கு 2,500 ரூபா அறவிடப்படுவதுடன், சாதாரண சேவையில் கடவுச் சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment