Header Ads



யோஷித்த ராஜபக்ச காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதி

ஹெவ்லொக் விளையாட்டு கழக்கத்திற்கும் கடற்படை விளையாட்டு கழகத்திற்கும் இடையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற றக்பி போட்டியில் முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பு நவலோக்க மருத்துவமனையில் அவர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். போட்டியில் இடைநடுவில் ஹெவ்லொக் விளையாட்டு கழகத்தின் வீரர்கள் யோஷித்தவை சுற்றிவளைத்து தாக்கியதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் றக்பி போட்டிகளின் போது யோஷித்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ரோஹித்த ராஜபக்ச ஆகியோரின் அருகில் கூட எதிரணி வீரர்கள் நெருங்க முடியாதபடி விளையாட்டு வீரர்களாலேயே வலயம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது அப்படியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் எதிரணி வீரர்களில் பல்வேறு இலக்குகளை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் யோஷித்த ராஜபக்ச மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் அது வழமையாக விளையாட்டின் போது ஏற்படும் விபத்து எனவும் ஹெவ்லொக் விளையாட்டு கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. இந்த செய்தி, அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் தவறானவை.

    நேற்று இரத்மலானை விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற ரக்பி போட்டியில் ஹவலொக் Vs ஆர்மி (இராணுவ) அணிகள் மோதின. ஹவலொக் அணியில் மகிந்தவின் மூன்றாவது மகன் யோசித்த விளையாடுகிறார்.

    மற்றொரு போட்டி வெலிசறை (கம்பஹா மாவட்டம்) கடற்படை முகாமில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் போலிஸ் Vs கடற்படை அணிகள் மோதின. கடற்படை அணியில் யோஷித விளையாடுகிறார்.

    ஹவலோக்ஸ் - கடற்படை அணிகளுக்கு இடையிலான போட்டி டிசம்பர் 5 ஆம் திகதிதான் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹவலோக்ஸ் வெற்றி பெற்றது.

    நேற்று போலிஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் யோசித்த ராஜபக்ச விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த செய்தியில் எதோ பாரிய தவறு இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.