Header Ads



ஞானசாரருக்கு எதிராக, முறைப்பாடுசெய்ய ஜம்மியத்துல் உலமா + தௌஹீத் ஜமாஅத் ஆலோசனை

கலகொட அத்தே ஞானசார தேரரின் குர்ஆனை தடைசெய்ய வேண்டும் என்ற கருத்துக்கு முஸ்லிம் சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஞானசார தேரர் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

அகில இலங்கை ஐம்இய்யத்துல்உலமா சபை

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவிச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம், ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்ய உலமா சபை ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரரின் கருத்துக்களை முற்று முழுதாக உலமா சபை நிராகரிக்கிறது. நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்பட்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஞானசார தேரர் மீண்டும் நாட்டில் இனமுறுகல்களை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஜனாதிபதியும் பிரதமரும் இதற்கு ஒரு போதும் இடமளிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தும் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. ஞானசார தேரரின் கருத்துக்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் அப்துல் ராஸிக் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் கருத்தினை முஸ்லிம் அமைச்சர்கள், இஸ்லாமிய அமைப்புகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் என்பனவும் கண்டித்துள்ளதுடன் ஞானசாரதேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியையும், பிரதமரையும், நீதியமைச்சரையும் கோரியுள்ளன.

No comments

Powered by Blogger.