பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்குள் 'மல்பரி'
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்வரிசை குழுவொன்றை அமைத்துக்கொண்டுள்ளனர்.
அண்மையில் இந்த பின்வரிசை (மல்பரி) குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பின்வரிசையைச் சேர்ந்த சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
தமது தரப்பு எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்து இந்தக் குழுவினர் கலந்தாலோசித்துள்ளனர்.
அமைச்சர் மலிக் சமரவிக்ரமவை அழைத்து தங்களது பிரச்சினைகளை இந்தக்குழுவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
அமைச்சர்களை சந்தித்து தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க நேரம் ஒதுக்கித் தருவமாறு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment