விக்னேஸ்வரன் எனும் சுனாமி பேரலையில், சம்மந்தன் சிக்கி தவிக்கிறார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் சிக்கி தவிக்கிறார். இந்த சுனாமி பேரலையிலிருந்து சம்பந்தனால் மீண்டு வர முடியவில்லை என்று மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளதன் மூலம் கூட்டமைப்புக்குள்
சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சம்மந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும்கூட விக்கினேஸ்வரனே பிரபலமானவராக காணப்படுகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தினேஷ் குணவர்த்தன எம்.பி. மேலும் குறிப்பிடுகையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் கூட அவரைவிட வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரபலமானவராக காணப்படுகின்றார்.
உதாரணமாக விக்கினேஸ்வரன் எனும் சுனாமி பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்மந்தன் சிக்கி தவிக்கிறார். இந்த சுனாமி பேரலையிலிருந்து சம்மந்தனால் மீண்டு வர முடியவில்லை.
வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளதன் மூலம் கூட்டமைப்புக்குள் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. விக்கினேஸ்வரன் மேலே இருக்கின்றார். சம்மந்தன் கீழே இருக்கின்றார். அதன்படி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சிக்கல்கள் காணப்படுகின்றன என்றார்.
You expected that. Now you can be happy.
ReplyDeleteசம்பந்தனுடன் ஒப்பிடுகையில் அரசியலில் மிகவும் அனுபவமும் அறிவும் (அரசியல்) குறைந்தவராகவே விக்னேஸ்வரன் காணப்படுகிறார். தமிழ் மக்கள் மத்தியில் விக்னேஸ்வரனுக்கு நல்ல அபிப்பிராயமும் மதிப்பும் இருக்கலாம் ஆனால் சம்பந்தன் அணியை புறந்தள்ளி அவர் தனது அரசியலை முன்னேடுப்பாரானால் அது தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பலவீனபடுத்துவதாகவே அமையும்.

ReplyDelete