இஸ்லாம் என்பதற்கு அளிக்கப்படும் தவறான விளக்கங்களை, முஸ்லிம்கள் புறந்தள்ள வேண்டும் - ஒபாமா
சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் விஷயத்தில் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; நமக்குள் சண்டையிட்டுக் கொள்வதால் தேசத்தின் பாதுகாப்புக்கு கேடு விளையும்,'' என, அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
ரேடியோவில் உரையாற்றிய அதிபர் ஒபாமா கூறியதாவது:
இஸ்லாமுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான போராக சித்தரிக்க ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் சதி செய்கிறது. இவ்விஷயத்தில் அமெரிக்கர்கள் தங்களுக்குள் சண்டை போடக்கூடாது; அதனால் தேச நலனுக்கு கேடு விளையும். மத சுதந்திரத்துக்காக அணி திரண்டு, சிறந்த பண்புகளுக்கான ஆதரவை வாரி வழங்கிய அமெரிக்கர்களை பாராட்டுகிறேன்.
சான்னொர்டினோ நகரிலும் பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் போது தேசத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாக எண்ணற்ற அமெரிக்கர்கள் கூறினர்.
சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் விஷயத்தில் நாம் முதலில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; அச்சமயத்தில் உடனே காவல் துறைக்கு தகவல் அளியுங்கள்.
இஸ்லாம் என்பதற்கு அளிக்கப்படும் தவறான விளக்கங்களை முஸ்லிம்கள் புறந்தள்ள வேண்டும்; தவறான எண்ணமும் பாகுபாடும் ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத இயக்கத்துக்கு
உதவியாக உள்ளது.நாட்டுப்பற்றுள்ள அமெரிக்க முஸ்லிம்களுக்கு மக்கள் நன்றி கூறுகின்றனர். நாடு முழுவதும் முஸ்லிம் நண்பர்களுடன் பிற அமெரிக்கர்கள் நட்புறவு பாராட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த செய்தியை அமெரிக்க முஸ்லிம்கள் நன்கு அறிவர். நாம் அனைவரும் அமெரிக்க குடும்பத்தின் அங்கங்கள்.இவ்வாறு பேசினார்.
Post a Comment