Header Ads



பொது மக்களுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்க, தயராகும் வைத்தியர்கள்

சுகாதாரத்துறையின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்த பாரிய வேலைநிறுத்த முயற்சி காரணமாக புத்தாண்டின் முதல் வாரம் பொதுமக்களுக்கு நெருக்கடியாக அமையவுள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்துச் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவர்கள் சங்கம் பாரிய வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

புத்தாண்டின் முதல் வாரம் மேற்கொள்ளப்படவுள்ள இந்தப் பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுகாதாரத்துறையின் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ளவுள்ளதால் பொதுமக்களும், நோயாளிகளும் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ளனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

No comments

Powered by Blogger.