கல்முனை பஸ் நிலையத்தின் அவலம் - ஹரீஸும், நிசாம் காரியப்பரும் கவனிப்பார்களா..? (படங்கள்)
-உடையான்-
கல்முனை பஸ் நிலையம் சிலகாலமாக குன்றும் குழியுமாக காட்சி தந்தது யாவரும் அறிந்த விடையம், ஆனால் அக்குழிகள் தற்போது பெய்யும் மழை நீரினால் நிறைந்து சேறும்சகதியுமாக மாறியிருக்கின்றது. இதனால் பயணிகளும் வாகன சாரதிகளும் அவதியுறுகின்றார்கள்.
நாட்டின் எட்டுத்திசைக்கும் கல்முனையிலிருந்து போக்குவரத்து நடைபெறுகின்றது. பெருந்தொகையான மக்களினால் இந்த பேரூந்து நிலையம் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும் மழை நீரினால் நிரம்பியுள்ள இக்குட்டையினை நிரப்புவதற்கு இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது எடுப்பார்களா?
Post a Comment