Header Ads



காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில், புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2016ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டின்  சரீஆ (மௌலவி,ஆலிம்),அல்குர்ஆன் மனனம் ஆகிய இருபகுதிகளின் முதலாம் ஆண்டிற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 09.மணிக்கு இல.50,ஹிரிம்புர குறுக்கு வீதி-காலி எனும் முகவரியில் அமைந்துள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.

விண்ணப்பதாரிகளில் அழைப்புக் கடிதம் கிடைத்தவர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் சமூகமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுவதுடன், ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களும் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவுக்கு என்றால் 15வயதிற்கிடைப்பட்ட தற்பொழுது 2015ம் ஆண்டு பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்களும், அல்குர்ஆன் மனனப் பிரிவுக்கு என்றால் 11-13வயதிற்கிடைப்பட்ட அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்த தற்பொழுது 2015ம் ஆண்டு பாடசாலையில் குறைந்தது 6ம் ஆண்டில் கல்வி கற்பவர்கள் ஆகியோருக்கு மேற்படி தகைமைகள் காணப்படின் இந்த நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

அத்தோடு இப் பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் தமிழ் மொழியில் பரிச்சயம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

மேற்படி நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்பவர்கள் தமது பிறப்பத்தாட்சிப் பத்திரம்,பாடசாலை முன்னேற்ற அறிக்கை ,கல்விச் சான்றிதழ்கள் என்பவற்றுடன் சமூகமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

இங்கு மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படுவதுடன் மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கும் ,அரசாங்கத்தின் அல்-ஆலிம் சான்றிதழ் பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.