Header Ads



"மகிந்த தலைமை தாங்க வேண்டும், இல்லையேல் விமல் வீரவன்சவுக்கு வழிவிட்டு ஒதுங்கவேண்டும்"

கூட்டு எதிர்க்கட்சிக்குத் தலைமை தாங்க முன்வருமாறும், இல்லையேல் மற்றவர் தலைமையேற்கும் வகையில் ஒதுங்கி வழிவிடுமாறும் மஹிந்தவுக்கு வற்புறுத்தலான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தாய்நாட்டிற்கான ராணுவத்தினர் அமைப்பின் தலைவருமான மேஜர் அஜித் பிரசன்ன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சம்பந்தன், அனுரகுமார திசாநாயக்க, ரணில்,சந்திரிக்கா ஆகியோரின் ஆதரவுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் மைத்திரி சுதந்திரக் கட்சியையும், அதன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் தோற்கடித்துள்ளார்.

தாய்நாட்டைப் பாதுகாத்த ராணுவ வீரர்களுக்கு எதிராக இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாபித்துள்ள போர்க்குற்ற விசாரணை நீதிமன்றங்களில் எதிர்வரும் நாட்களில் வெள்ளையின நீதிபதிகள் ராணுவத்தினரை விசாரிக்க உள்ளார்கள்.

அத்துடன் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மூலமாக நாட்டுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.

எனவே பண்டாரநாயக்கவுடன் இணைந்து டீ.ஏ. ராஜபக்ஷ (மஹிந்தவின் தந்தை) அன்றைய அரசாங்கத்திலிருந்து வெளியேறி தனிக்கட்சி அமைத்தது போன்று தற்போது மஹிந்தவும் சுதந்திரக்கட்சியை விட்டு வெளியில் வரவேண்டும்.

நாட்டை இருண்ட யுகத்துக்குள் தள்ளிய முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்ற ரீதியில் அதற்கான தகுதி மஹிந்தவுக்கு உண்டு.

இல்லையேல் இனியும் காலத்தைக் கடத்தாது, விமல் வீரவங்ச போன்றோரை தலைமை தாங்க வழிவிட்டு மஹிந்த ஒதுங்கிக் கொள்ள வேண்டும். எதிர்வரும் 19ம் திகதிக்கு முன்னர் மஹிந்த இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும் என்றும் மேஜர் அஜித் பிரசன்ன எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.