ஐக்கிய அரபு இராச்சியத்தில், அல் அஸ்ஹர் பல்கலைக்கழக கிளை ஆரம்பம்
முஸ்லிம்களின் மதிப்பிற்குரிய நிறுவனமான எகிப்தின் அல் அஸ்ஹர் முதல் முறை நாட்டுக்கு வெளியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல்கலைக்கழக கிளை ஒன்றை திறக்கவுள்ளது.
அல் அஸ்ஹரின் தலைமை இமாமும் எகிப்தின் தலைமை முப்தியுமான ஷெய்க் அஹமது அல் தயிப் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இஸ்லாமிய விவகார மற்றும் நம்பிக்கை நிதியத்தின் பொது நிர்வாகத்திற்கும் இடையே இது தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.
இந்த உடன்பாட்டுக்கு அமைய அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய விஞ்ஞானம் மற்றும் தாஹ்வா பிரிவின் கிளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் திறக்கப்படவுள்ளது. உலகின் மிகப் பழைமையான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் இஸ்லாமிய கல்வியின் மையமாகவும் கருதப்பட்டு வருகிறது. கல்வி கற்க உலகெங்கும் இருந்து மாணவர்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment