முஜிபுர் ரஹ்மானிடம் முறையிடலாம்
குறைகேள் அதிகாரிகள் பிரிவு ஐ.தே.க. தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜெயவர்தன, முஜிபுர் ரஃமான், பேராசிரியர் ஆசு மாரசிங்ஹ ஆகியோர் இதற்கென நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுக் கூட்டத்தின் போது கட்சித் தலைமையகத்தில் குறைகேள் அதிகாரிகள் பிரிவை ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் காவிந்த ஜயவர்தன, முஜிபுர் ரஹ்மான், பேராசிரியர் ஆசு மாரசிங்ஹ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சி ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வு தேடுவதே குறைகேள் அதிகாரிகள் பிரிவின் பிரதான நோக்கமாகும்.
அடுத்துவரக்கூடிய தேர்தலுக்கான செயற்பாடுகள் குறித்து ஆராயும் பணியும் இக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவு நாளாந்தம் முற்பகல் 10.30 மணி முதல் 12.30 மணி வரை கட்சித் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இயங்கும் இதன் போது குறைந்தபட்சம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது சமுகமளிப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்குறை கேள் அதிகாரிகள் பிரிவின் முதலாவது அமர்வு நேற்று இடம்பெற்றது.
குறைகேள் அதிகாரிகள் பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளும் பொருட்டு அவர்களது தொலைபேசி இலக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
டாக்டர் காவித்த ஜயவர்தன (எம்.பி.) 0719909555
முஜிபுர் ரஹ்மான் (எம்.பி.) 0773312010
பேராசிரியர் ஆசு மாரசிங்ஹ (எம்.பி.) 0777779897
Post a Comment