வஸிம் தாஜூதீன் உயிருடன் காருக்குள் எரியூட்டப்பட்டார் - நீதிமன்றத்தில் புதிய அறிக்கை
2012ஆம் ஆண்டு இடம்பெற்ற ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் மரணம், கொலை என்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தாஜூதீன் கார் விபத்து ஒன்றின் போதே மரணமானார் என்று விசாரணைகள் முடிக்கப்பட்டிருந்தன.
எனினும் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ விசாரணைகளின் அடிப்படையில் தாக்குலுக்கு உள்ளான தாஜூதீன் கொலை செய்யப்பட்டு பின்னர் தமது காரின் இடது ஆசனத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பான அறிக்கை நேற்று (3) நீதிமன்றத்தில் விசேட மருத்துவர் சபையினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மீள் மருத்துவ பரிசோதனைக்கான தாஜூதீனின் சடலம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தெஹிவளை மயானத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டது.
மருத்துவ அறிக்கையின்படி தாஜூதீனின் கால், கழுத்து, வயிறு போன்ற இடங்களில் காயங்கள் காணப்பட்டன. இது கார் எரியூட்டப்பட்டபோது ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம்
எனினும் உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்னரே தாஜூதீனின் கார் எரியூட்டப்பட்டுள்ளதாக நீதிமன்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
எனவே தமது நியாயப்படி தாஜூதீன் கார் விபத்தில் கொல்லப்படவில்லை என்று நீதிமன்றத்தில் மருத்துவ சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தலையில் ஏற்பட்ட காயம் பெரும்பாலும் சுயநினைவற்ற நிலையில் ஏற்பட்டிருக்கலாம். எனினும் இடதுமுழங்கால் தாக்குதல் நடத்தப்பட்டு முறிவடைந்துள்ளது.
தாக்குதலின்போது கழுத்தில் இருந்து அதிகளவான இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை காரை செலுத்தி வந்த தாஜூதீன் எவ்வாறு கார் தீப்பற்றியவுடன் பயணிகள் அமரும் இடதுபக்க ஆசனத்துக்கு வந்திருக்க முடியும் என்று மருத்துவர் குழு தமது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பான அடுத்த விசாரணை டிசம்பர் 10ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.
இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிவான் நிசாந்த பீரிஸ், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து மாத்தறை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment