Header Ads



பால்மா விலை இழுபறி யுத்தம் ஆரம்பம், மறுக்கிறார் றிசாத்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தீர்வை வரவு - செலவுத் திட்டத்தில் கிலோவொன்றுக்கு 135 ரூபாவிலிருந்து 225 ரூபா வரை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து விற்பனை விலைகளை அதற்கேற்ப அதிகரிப்பதற்கான அனுமதி கோரி பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அதற்கமைய இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலையை 35 ரூபாவாலும், ஒரு கிலோ பைக்கற்றின் விலையை 90 ரூபாவாலும் அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

400 கிராம பைக்கற்றின் தற்போதைய விலையான 325 ரூபாவை எவ்விதத்திலும் தொடர்ந்து நிர்வகிக்க முடியாதெனவும், வரவு - செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட தீர்வையால் விற்பனை விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இறக்குமதித் தீர்வை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருசில நிறுவனங்கள் தங்களது இறக்குமதிகளை ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளதாகவும் வேறு சில நிறுவனங்கள் இறக்குமதிகளை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

வழக்கமாகவே நுகர்வோர் அதிகாரசபைக்கும் பால்மா நிறுவனங்களுக்கும் இடையில் உருவாகும் இந்த இழுபறிப் போராட்டம் காரணமாக சந்தையில் பால்மாவுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படக்கூடுமென பாவனையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

2

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகள் எந்தவிதத்திலும் அதிகரிக்கப்படமாட்டாது என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று 23 கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளை நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக பாராளுமன்றத்தில் 2016ம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும் போது தெரிவிக்கப்பட்ட விதத்திலேயே பால் மாக்களின் விலைகள் அமையும் எனவும், இது தொடர்பில் பால்மா உற்பத்தி நிறுவங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுமேயானால், அவர்களுடன் கலந்துரையாடத் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.