Header Ads



வில்­பத்துவை பாது­காக்க முப்­ப­டை­க­ளை பயன்­ப­டுத்துங்கள் - ஜனாதிபதியிடம் பொது பல சேனா கோரிக்கை

வில்­பத்து வனப் ­பி­ர­தே­சத்தை அழி­வு­க­ளி­லி­ருந்து பாது­காக்க தாம­திக்­காது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முப்­ப­டை­க­ளையும் பயன்­ப­டுத்த வேண்­டு­மென பொது ­ப­ல­சேனா அமைப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

வில்­பத்து வன­ பி­ர­தே­சத்தைப் பாது­காக்கக் கோரி கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி பொது­ப­ல­சேனா அமைப்பு ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தை மீள நோக்­கும்­ப­டியும் தெரி­வித்­துள்­ளது.

பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்­றிலே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வில்­பத்து உட்­பட சூழ­லுக்கு ஆபத்­துக்கள் ஏற்­ப­டு­வதைப் பாது­காப்­ப­தற்­காக முப்­ப­டை­களின் உத­வி­களைப் பெற்றுக் கொள்­வ­தா­கவும், முப்­ப­டை­களை கட­மையில் ஈடு­ப­டுத்­து­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்து தற்­போது 6 மாதங்கள் கடந்­து­விட்­டன.

ஆனால் இது­வரை அதற்­கான நட­வ­டிக்­கைகள் எதுவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

வில்­பத்து வன பிர­தே­சத்தில் சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்கள் பெரு­ம­ளவு இடம்­பெற்­றுள்­ளன. இந்த சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்­களை பொது­பல சேனாவே முதலில் வெளிச்­சத்­துக்குக் கொண்­டு­வந்­தது. சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்கள், வனப்­பி­ர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட காடு­அ­ழிப்­புகள் என்­ப­ன­வற்றின் ஆவ­ணங்­களை நாம் ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பித்­தி­ருக்­கிறோம்.

நாங்கள் நூறுக்கும் குறை­வான ஆயுளைக் கொண்­ட­வர்­க­ளாவோம். என்­றாலும் எமது பரம்­பரை ஆயி­ரக்­க­ணக்­கான வரு­டங்கள் இந்­நாட்டில் வாழ வேண்­டி­யுள்­ளது.

எதிர்­கால சந்­த­தி­யி­னரின் நன்மை கருதி ஜனாதிபதி வில்பத்து விவகாரத்தில் தலையிட்டு உடனடியாகத் தீர்வு பெற்றுத் தரவேண்டும்.

வில்பத்துவை அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு எமது அமைப்பு தொடர்ந்தும் போராட்டங்களை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. Kadasiyaga kaattuku vanthutaan BBS vera item illa

    ReplyDelete
  2. அங்கென்ன கரும்புலிகள் வாழ்கின்ரார்களோ........இலங்கைநாட்டுக்கு புழனாய்வாலர்களே தேவையில்லைபோல்......

    ReplyDelete
  3. The president must take necessary steps to save the country and Bhudism from BBS, Wilpathu has no problem whatsoever!

    ReplyDelete

Powered by Blogger.