Header Ads



வசீம் தாஜூதீன் கொலை, தொடர்பான சீ சீ டிவி - காணொளிகளில் சில பிரபுக்களும்..!

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சீ சீ டிவி காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் 

தற்போது இரகசிய காவல் துறையினரிடம் இருக்கின்ற காணொளிகள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார் 

அந்த காணொளிகளில் சில பிரபுக்களும் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

வசீம் தாஜூதீனின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், கடந்த வியாழக்கிழமை அது திட்டமிட்ட கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது

விஷேட மருத்துவ குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.