" பாங்கிற்கான துஆவை அவர் ஓதி முடித்தும், இறைவன் அவரை அழைத்து கொண்டான்.."
ஒருமனிதனின் இறுதி செயல் எப்படி அமைகிறதோ அதற்கு ஏற்ற நிலையிலேயே அவனது மறுமை் வாழ்வும் அமையும்.
இறைவா எங்கள் இறுதி நிலையை சிறப்பானதாகவும் உனக்கு விருப்பமானதாகவும் அமைத்து தருவாயாக என்ற பொருளை தரும்
விதத்திலான பிரார்த்தனை நபிகள் நாயகம் அதிகம் பிரார்த்திக்கும் பிரார்த்தகைகளில் ஒன்றாகும்
இந்த பிரார்த்தைனைக்கு ஏற்ற ஒரு நிகழ்வு நேற்றைய 19-12-2015 தினம் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடை பெற்றது
ஆம் ஜித்தா நகரை சார்ந்தவர் ஒரு முஸ்லிம் ஒவ்வொரு தொழுகைக்கும் பாங்கோசை ஒலிக்க படும் முன்பே இறை இல்லத்தின் முதல் ஸப்பில் வந்து அமர்ந்துவிடுவார் பள்ளியில் பாங்கு சொல்ல படு்ம் போது அதற்குரிய பதிலை சொல்லி கொண்டிருப்பார்
என்றும் போல் நேற்றும் அஸர் தொழுகைக்காக ஜித்தாவில் உள்ள மஸ்ஜிதுக்கு வந்தார் முதல் ஸப்பில் அமர்ந்தார் முஹத்தின் பாங்கு சொல்ல ஆரம்பித்தார் முஹத்தின் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் உரிய பதிலை சொல்லி கொண்டிருந்தார் முஹத்தின் அவர்களின் பாங்கோசையும் முடிவுற்றது அத்தோடு அந்த நல்ல மனிதரின் உலகவாழ்வும் முடிவுக்கு வந்தது
ஆம் பாங்கோசைக்கு பதில் சொல்லிவிட்டு பாங்கிற்கான் துஆவை அவர் ஓதி முடித்தும் இறைவன் அவரை அழைத்து கொண்டான் முதல் ஸப்பையும் தொழுகையையும் உயிராய் நேசித்தவர் தொழுகைகை எதிர்பார்த்து முதல் அமர்ந்திருந்த நிலையிலேயே இறைவனடி சார்ந்தார்
இன்று அவரது ஜனாஸா தொழைகியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்
.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹஹி ராஜிஊன்
May Allah grant us the same opportunity. Aameen.
ReplyDeleteMay ALLAH accept him and grant us a beautiful mauth.
ReplyDeleteإنا لله وإنا إليه راجعون
ReplyDelete