இதுதான் பாபர் மஸ்ஜித்தின் உண்மையான வரலாறு (வீடியோ - காணத் தவறாதீர்கள்)
அயோத்தியில் 450 ஆண்டுகளாக தொழுகை நடத்தப்பட்டு வந்த இந்தியாவின் வரலாற்று சின்னமான பாபர் மஸ்ஜித் இடிப்பு நாள் டிசம்பர் 6,
இந்துத்துவ மதவாத சக்திகளால் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத்தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்ற பிறகு பள்ளிவாசல் கதவை உடைத்து ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோரின் சிலைகளை வைத்து விட்டு ஓடிவிட்டனர்.
வைகறைத்தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று இந்துத்துவ மதவாத கலாட்டாவில் இறங்கினர்.
இந்துத்துவ மதவாத கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.
இந்திய வரலாற்றில் 65 ஆண்டுகளாக முடியாத ஒரே வழக்கு என்றால் அது பாபர் மஸ்ஜித் வழக்கு தான்.
அன்று முதல் பிரச்சினை பூதாகாரமாக்கப்பட்டு 1992 டிசம்பர் 6 ல் பாபர் மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் அன்றைய காங்கிரஸ் பிரதமராக இருந்த நரசிம்மராவ் உடனடியாக அதே இடத்தில் பாபர் மஸ்ஜித் கட்டித்தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
மத்திய அரசு வாக்குறுதி அளித்து ஆண்டுகள் 23 ஐ தாண்டி விட்டது, இன்னும் பள்ளிவாசல் கட்டித்தரப்படவில்லை.
டிசம்பர் 6 உலக அரங்கில் இந்தியா தலைகுனிந்த நாள், இந்தியர்களின் இதயங்களில் இடித்து நொறுக்கப்பட்ட நாள், இந்தியாவின் கருப்பு நாள்,
பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து தமிழகம் முழுவதும் நாளை பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
ஆண்டுகள் எத்தனை ஆனாலும் ஆறாது அந்த ரணம், பாபர் மஸ்ஜிதை மீட்காமல் ஓயாது எங்கள் மனம்...
Post a Comment