Header Ads



நியாஸ் மொளலவியின், உரைகள் அடங்கிய நூல் வெளியீடு

-அஷ்ரப் ஏ சமத்-

மர்ஹூம் நியாஸ் மொளலவியின்  உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவும் 15மில்லியன் ருபா செலவில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காகவும் இஸ்ஹானியா அறபுக் கல்லுாாியில் கல்வி பயிண்ற பழைய மாணவா் சங்கம் இன்று மருதானை பூக்கா் மண்டபத்தில் ஒன்று கூடினாா்கள்.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் பங்கேற்றார். அமைச்சா் றிசாத் நுாலின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டதுடன்  இஸ்ஹானியா கட்டிடத்திற்காக 10 இலட்சம் ருபா நிதி தருவதாகவும் வாக்குறுதியளித்து கட்டிட நிதித் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தாா்.

இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாட் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை நாட்டுத்தலைவருடன் பேசுவதற்கு அரசியல் தலைமைகள் தயங்கிய போதெல்லாம் மர்ஹூம் நியாஸ் மொளலவி துணிவுடன் பேசி அதனைச்செய்தும் சாதித்தும் காட்டினார். கொழும்பில் பீர்சாஹிபு வீதியில் அதிகமான மக்கள் செரிந்து வாழும் பகுதியில் ஒரு மத்ரஸா நடத்துவது இயலாத காரியம் ஆனால் அதனை நியாஸ் மொளலவி ஒரு சவாலாக எடுத்து நடாத்திஆயிரக்கணக்கான உலமாக்களை உருவாக்கியவர். அவர் மிகுந்த தைரியசாலி என்பதை நான் அனுபவ்வாயாலாக கண்டுள்ளேன்.

அவருடன் நான் நெருங்குப்பழகியுள்ளேன் என்றார் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரவித்தாா். இந் நிகழ்வில் நியாஸ் மௌலவியின் புதல்வா் உபைத் நியாஸ் அஷ்கரி அவா்களும் கலந்து கொண்டனா்.



No comments

Powered by Blogger.